Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுரண்டல், அடக்கு முறையற்ற இந்தியா உருவாக வேண்டும்: பரதன்

சுரண்டல், அடக்கு முறையற்ற இந்தியா உருவாக வேண்டும்: பரதன்
, சனி, 18 பிப்ரவரி 2012 (12:54 IST)
சுரண்டலற்ற, அடக்கு முறையற்ற இந்தியா உருவாக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 22-வதமாநில மாநாடு நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஏ.பி.பரதன் கூறியதாவது:

சுரண்டலற்ற, அடக்கு முறையற்ற இந்தியா உருவாக வேண்டும். வளர்ச்சி அடைவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி விரும்புகிறது. மக்களினவாழ்வாதாரத்திற்காக கம்யூனிஸ்டு கட்சி போராடி வருகிறது. பொருளாதார நெருக்கடிக்கு காரணம் முதலாளித்துவம் தான். முதலாளித்துவத்தாலவறுமையை ஒழித்து விமுடியாது.

நாட்டில் உள்ள எல்.ஐ.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்மத்திய அரசு கடும் முயற்சி செய்து வருகிறது. இதற்கு இடதுசாரிகள் கடுமஎதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் இன்னும் பொதுத்துறநிறுவனங்கள் இங்கு செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியை போலவே பாரதீய ஜனதாவும் முதலாளித்துவத்தை வளர்த்தவந்தது.

தற்போது பா.ஜ.க. இந்திய மக்களை பல வகுப்புகளாக பிரித்து ஆட்சிக்கு வமுயற்சி செய்கிறது. இக்கட்சிகளுக்கு மாற்றாக மத்தியில் இடதுசாரிகள் மட்டும் இருக்க முடியுமஎன்பதை மக்கள் உணர்ந்து கொண்டு இதற்காக போராட முன்வர வேண்டும். வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தம் வரலாற்று சிறப்புமிக்க மக்களஎழுச்சி போராட்டமாக அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil