Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிய பேருந்துகளில் உள்ளது இரட்டை இலை தான் - தேர்தல் ஆணையம்

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2014 (08:55 IST)
அரசு சொத்துக்களில் உள்ள இரட்டை இலை சின்னத்தை மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
FILE

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால், தமிழகத்தில் அரசு சொத்துக்களில் உள்ள அதிமுக கட்சி சின்னமான இரட்டை இலை சின்னத்தை மறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சொத்துக்களில் உள்ள இரட்டை இலை சின்னங்களை மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சிற்றுந்துகளில் வரைந்துள்ள படம், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் போன்று இருப்பதால் அவற்றை மறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த படங்கள் நடமாடும் விளம்பரமாக ஆகிவிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments