Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிக் பாட்சா குழுமத்திற்கும், டிபி. குழுமத்திற்கும் நெருங்கிய தொடர்பு

Webdunia
ஞாயிறு, 1 மே 2011 (15:58 IST)
முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா நடத்திவந்த கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம், டிபி ரியாலிட்டி குழுமத்தைச் சேர்ந்த ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகியோரின் உத்தரவுக்கேற்ப நடத்தப்பட்டு வந்ததாக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவன ஊழியர் ஒருவரின் வாக்குமூலத்தை மத்திய புலனாய்வுக் கழகம் பதிவு செய்துள்ளது.

பால்வாவின் பரிந்துரையின்பேரில் அந்த நிறுவனத்தின் 40 ஊழியர்களை நிர்வாக இயக்குநர் சாதிக் பாட்சா பணிநீக்கம் செய்ததாக அந்த ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

2 ஜி ஊழல் தொடர்பாக சிபிஐயால் விசாரிக்கப்பட்ட சாதிக் பாட்சா சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பாட்சாவின் தனி உதவியாளரான கெவின் அம்ரித்ராஜ், கிரீன் ஹவுஸ் மற்றும் டிபி நிறுவனத்துக்கிடையேயான சில திட்டங்கள் காரணமாக கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

கிரீன் ஹவுஸ் நிறுவனத்துக்கும், டிபி நிறுவனத்துக்கும் இடையேயான உறவு குறித்து சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பலரை டிபி ரியாலிட்டியைச் சேர்ந்த ஒரு குழு 2008 இறுதியில் நேர்முகம் செய்தது. அவர்களின் பரிந்துரையின்பேரில் 42 கிரீன்ஹவுஸ் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

2 நிறுவனங்களும் சேர்ந்து செயல்படும் திட்டத்தின் பகுதியாகவோ, அல்லது வேறு சில ஏற்பாடுகளுக்காகவோ அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என கெவின் அம்ரித்ராஜ் தெரிவித்தார்.

டிபி குழுமத்தைச் சேர்ந்த ஈடெர்னா டெவலப்பர்ஸ் நிறுவனத்தால் கிரீன் ஹவுஸ் நிறுவனத்துக்கு ரூ 1.25 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் சிலகாலம் கழித்து அந்த பணம் கிரீன் ஹவுஸ் நிறுவனத்தால் திருப்பி அளிக்கப்பட்டது என அம்ரித்ராஜ் சிபிஐயிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments