Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை நாளை திறப்பு

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2013 (18:00 IST)
காவிரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படுகிறது. இதனால் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஜூன் மாதத்தில் அணை நீர் மட்டம் 15 அடியாக குறைந்ததால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கமுடியாத நிலை உருவானது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழையால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி சுமார் 1 லட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

இதனால் காவிரியில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேட்டூர் அணையின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. 15 அடியாக இருந்த நீர் மட்டம் 35 நாட்களில் 105 அடியை தாண்டியது. இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 108.49 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 76.28 டிஎம்சி. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து நீர் திறப்பு 23 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதால் மேட்டூருக்கு வரும் நீர் வரத்து மேலும் சரிவடையும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பகுதி சம்பா சாகுபடிக்காக நாளை மதியம் 12.30 மணிக்கு நீர் திறக்கப்படுகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments