Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன் டிவி ராஜா உதவியாளர் வெற்றிவேந்தனும் கைது!

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2013 (20:04 IST)
FILE
சன் டிவி பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் சன் செய்தி ஆசிரியர் ராஜாவின் உதவியாளர் வெற்றி வேந்தனும் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார்.

ராஜா கைதானதையடுத்து இவர் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவி செய்திப் பிரிவில் வாசிப்பாளராக சுமார் ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் 28 வயதாகும் அகிலா என்பவர்.

அகிலாவுக்கு தொடர்ந்து ராஜா பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் இணங்க வைக்க அவருக்கு நிறைய ஆசை வார்த்தைகளையும் முடியாத பட்சத்தில் மிரட்டலையும் விடுத்துள்ளார் ராஜா என்று புகார் பதிவானது.

இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜா மற்றும் அவரது உதவியாளர் வெற்றி வேந்தனைக் கைது செய்ய போலீஸ் முடிவெடுத்து ராஜாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

ஆனால் இவருக்கு பல வழிகளிலும் உறுதுணையாக இருந்து வன்ட்ததோடு இவருமே பல செய்தி வாசிப்பாளருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் புகார் மனுவுடன் சேர்த்து அளிக்கப்பட்டதால் ராஜா இவரை திருச்சிக்கு பணி இட மாற்றம் செய்துள்ளார்.

இந்த நிலையில் அவரையும் கைது செய்துள்ளது போலீஸ்.

ராஜா போன்றவர்களை பணி நீக்கம் செய்ய சன் நிர்வாகம் முன் வரவேண்டும் போலீசாரும் ராஜா, வெற்றிவேந்தன் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அந்தப் பெண் கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!