Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொண்டை ஊசி வளைவுகளில் கண்ணாடி வைக்க கோரிக்கை

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2013 (19:00 IST)
திம்பம் மலைபாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் வருவதை தெரிந்துகொள்ள கோத்தகிரி மலைப்பாதையில் வைத்துள்ளது போல் வழிகாட்டி கண்ணாடி அமைக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கர்நாடகா மாநிலம் எல்லையில் உள்ளது திம்பம் மலைப்பகுதி. இது கடல்மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்டபகுதியாகும். பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் பத்து கி.மீ., இடைவெளியில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

இதில் ஆறு, எட்டு, ஒன்பது, பதினெட்டு, இருபது, இருபத்தி ஏழு உள்ளிட்ட வளைவுகள் மிகவும் ஆபத்தானவை. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத காரணத்தால் இந்த வளைவுகளில் அடிக்கடி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்துகளில் பல உயிர்கள் பலியாகியுள்ளது.

இந்த வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 209 திண்டுக்கல்லில் தொடங்கி பழனி, பொள்ளாச்சி, கோயமுத்தூர், சத்தியமங்கலம் வந்து திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் செல்கிறது. இதனால் திம்பம் மலைப்பாதையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

சத்தியமங்கலம், கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு பகுதியில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாழை, மஞ்சள், பருத்தி, மக்காசோளம், மல்லிகை, தக்காளி , முட்டைகோஸ், கரும்பு உள்ளிட்ட பாரங்கள் ஏற்றி நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் சென்று வருவது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பும்போது எதிரே வரும் வாகனங்கள் மீது மோதாமல் இருக்க எதிரே வரும் வாகனம் தெரியும்படி கோத்தகிரி மலைப்பாதையில் வைத்திருப்பதுபோல் வழிகாட்டி கண்ணாடி வைக்கவேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பொன்னுசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
FILE

தமிழகம், செய்திகள், மலைச் சாலை, கொண்டை ஊசி வலைவு, கண்ணாடிகொண்டை ஊசி வளைவுகளில் கண்ணாடி வைக்க கோரிக்கை

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments