Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதான திமுக-வினரை விடுவிக்க ஜெயலலிதா உத்தரவு!

Webdunia
புதன், 4 ஜூலை 2012 (18:54 IST)
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் இன்று காலை 9 மணி அளவில் போராட்டத்தை துவக்கினார்கள். சென்னையில் மட்டும் மொத்தம் 16 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.

இதுபோல் நெல்லை, மதுரை, கோவை, தஞ்சை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, சேலம், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க.வினர் அணி அணியாக கலந்து கொண்டனர்.

வடசென்னையில் நடந்த மறியல் போராட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டதால், அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் சைதாப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி., முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோரும், சேப்பாக்கத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், நடிகை குஷ்பு உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். முடிவில் அனைவரும் திருமண மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் பெயர், விபரம், முகவரி சேகரிக்கப்பட்டது. இன்று மாலை கைதான அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் கைதான ஸ்டாலின், தயாநிதி மாறன், கனிமொழி, குஷ்பு, டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க.வினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட தி.மு.க.வினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரிலேயே தி.மு.க.வினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!