Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூடங்குளம்: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

கூடங்குளம்: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
, ஞாயிறு, 18 செப்டம்பர் 2011 (14:50 IST)
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் கடந்த 11-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் கூட்டப்புளி, பெருமணல். இடிந்தகரை, தோமை யார்புரம், கூத்தன்குளி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழை, மணப்பாடு, ஆலந்தலை, புன்னக்காயல் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் போராட்டத்தில் கலந்துகொண்டு வருகின்றனர். நேற்று நடந்த 7-வது நாள் போராட்டத்தில் நாகர் கோவிலை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 127பேரில் பலரது உடல்நிலை மோசமானதால் உண்ணாவிரத பந்தலிலேயே அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. அவர்களில் 40பேரின் உடல்நிலை மிகவும் மோசமானதைதொடர்ந்து அவர்கள் கூடங்குளம், இடிந்தகரை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார்ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள உவரியை சேர்ந்த மீனவர்கள், கடந்த 7நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள். அவர்களுக்கு வருமானம் இல்லாததால், அவர்களது குடும்பத்தை சேர்ந்த முதியவர்களும், குழந்தைகளும் பசியாறும் வகையில் உவரியில் ஊர்மக்களின் சார்பில் கஞ்சித்தொட்டி திறக்கப்பட்டது.

அதன்மூலம் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டுவருகிறது. இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று 8-வது நாளாக நடக்கிறது. இதில் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள ராதாபுரம் தொகுதி தே.மு.திக. எம்.எல்.ஏ. மைக்கேல்ராயப்பன் இன்று 4-வது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil