Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடங்குளம்: நவ.5ஆம் தேதி போராட்டம்-பழ.நெடுமாறன்

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2011 (13:17 IST)
அணுமின் நிலையத்துக்கு எதிரான கூடங்குளம் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நவம்பர் 5-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அணுமின் உலைக்கு எதிராக கூடங்குளம் மக்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நவம்பர் 5-ம் தேதி சனிக்கிழமை அன்று தென் மாவட்டங்களின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சிகள், அனைத்துத் தமிழர் தேசிய அமைப்புகள், அனைத்து மனித உரிமை அமைப்புகள், ஒடுக்கப்பட்டோர் அமைப்புகள் உள்பட அனைவரும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

கூடங்குளத்திற்கு அருகே உள்ள இடிந்தகரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அதே நாளில் மாபெரும் உண்ணா விரதப் போராட்டம் நடைபெறும். மற்ற இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அந்தப் பகுதி மக்கள் மட்டுமல்ல தென் மாவட்டங்களில் வாழும் பெரும் பகுதி மக்களும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதை நினைவில் கொண்டு கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அணி திரளும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments