Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடங்குளம் அணு மின்சக்தித் திட்டம் தாமதம்

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2010 (14:00 IST)
தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் திட்டத்திற்காக வரவேண்டிய 2000 மெகாவாட் அணு உலைக்குத் தேவையான உதிரிபாகங்கள் தாமதமடைந்துள்ளதால் இந்த அணு மின் திட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு சேவை அளிக்கவுள்ள பாரத் கனரக மின் எந்திர தொழிற்சாலை நிறுவனமான பி.எச்.இ.எல். நிறுவனத்திற்கும் சுமாராக எப்போது இந்த அணு மின் திட்டம் தன் முதல்கட்ட பணிகளைத் துவங்கும் என்ற விவரம் தெரியவில்லை.

இந்திய அணுமின்சக்தி நிறுவனம் கூடங்குளத்தில் இரண்டு 1000 மெகாவாட் மென்நீர் திறன் அணு உலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான நட்டுகள், போல்ட்டுகள் உட்பட அனைத்து உதிரிபாகங்களையும் ரஷ்யா வழங்குகிறது.

இந்நிலையில், "குழாய் அமைப்பதற்கான 30 விழுக்காடு உதிரிபாகங்கள் இன்னமும் ரஷ்யாவிலிருந்து வரவில்லை. எப்போது வந்து சேரும் என்ற தகவலும் எங்களிடம் தெரிவிக்கப்படவில்லை." என்று பெல் நிறுவன தலைமை செயல் இயக்குனர் பி.ஆர்.ஸ்ரீராம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உண்மையானத் திட்டங்களின் படி 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே கூடங்குளத்தில் இந்த அணு மிந்திட்டத்தின் முதல் யூனிட் தொடங்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அதன் பிறகு மீண்டும் 2010ஆம் ஆண்டு மத்திக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த அணு மின்சக்தித் திட்டத்திற்காக ரஷ்யாவிலிருந்து 12 அணு மின் உலைகள் இந்திஆவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் 6 அணுமின் உலைகள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments