Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல‌ர் ப‌ணி‌க்கான உடல்தகுதி தேர்வு நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2009 (10:51 IST)
காவல‌ர் ப‌ணி‌க்கான உடல்தகுதி தேர்வு நடைபெறும் இடங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழு ம‌ம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் 2009ஆம் ஆண்டுக்கான 4 ஆயிரம் இரண்டாம் நிலை காவலர்கள் (ஆண், பெண்) தேர்வுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கீழ்கண்டவாறு அந்தந்த மாவட்டங்களில் வர ு‌ம் 10ஆ‌ம் தேதி முதல் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடல் கூறு அளத்தல், உடல் தாங்கும் திறனறி தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு ஆகியன நடைபெற உள்ளது.

சென்னை - (சென்னை, சென்னை புறநகர்) காஞ ்‌ச ிபுரம்- (திருவள்ளூர், காஞ ்‌ச ிபுரம் மாவட்டங்கள்), விழுப்புரம்- (விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள்), வேலூர் - (வேலூர் மாவட்டம்), தர்மபுரி - (தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்), சேலம் - (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்).

கோயம்புத்தூர் - (கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள்), திருச்சி- (திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்), தஞ்சாவூர் - (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள்), மதுரை- (மதுரை மாவட்டம்).

விருதுநகர் - (விருதுநகர் மாவட்டம்), திண்டுக்கல்- (திண்டுக்கல், தேனி மாவட்டங்கள்), ராமநாதபுரம்- (ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள்), திருநெல்வேலி - (திருநெல்வேலி மாவட்டம்), நாகர்கோவில்- (கன்னியாகுமரி மாவட்டம்).

இந்த உடல் திறன் தேர்வுக்கான அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள் அவர்கள் சார்ந்துள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை 10 ஆ‌ம் தேதி காலை 6 மணி அளவில் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் அணுகி தங்களது கோரிக்கையினை தெரிவித்து இத்தேர்வில் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் 10 ஆ‌ம் தேதி முதல் 12 ஆ‌ம் தேதி வரை தேர்வு நடைபெறும். காலை 6 மணிக்கே விண்ணப்பதாரர்கள் ஆஜராக வேண்டும் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments