Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை பணியிடங்கள் அதிகரிப்பு - ஜெயலலிதா

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2012 (20:03 IST)
தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் காவல்துறை பணியாளர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சட்டபேரவையில் இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அப்போது, காவல் துறையில் தற்போது 1,12,363 பணியிடங்கள் உள்ளன. பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப காவல் துறை பணியாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையிலும்; காவல் துறையின் செயல்பாடு மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும்; சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் காவல் துறையினர் அதிக அக்கறை செலுத்தும் வகையிலும்; மாநிலத்திலுள்ள 1,498 காவல் நிலையங்களுக்கென 19,620 கூடுதல் பணியிடங்கள் நான்கு ஆண்டு காலத்தில் தோற்றுவிக்கப்படும்.

இவ்வாறு புதிய பணியிடங்கள் தோற்றுவிப்பதாலும், காலிப் பணியிடங்களை நிரப்புவதாலும் மொத்தம் 30,000 பணியாளர்கள் காவல் துறைக்கென தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆண்டு காலத்தில் தேர்ந்தெடுக்கப்படுவர ் என்று தெரிவித்தார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments