Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலவரைய‌ற்ற உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌‌த்தை தொட‌ர்‌ந்தன‌ர் கூடங்குள‌ம் ‌ம‌க்க‌ள்

Webdunia
புதன், 12 அக்டோபர் 2011 (10:42 IST)
க ூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்தும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழுவினர் அ‌றி‌வி‌த்து‌ள்ளதா‌ல், உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌ம் இ‌ன்று 4வது நாளை எ‌ட்டியு‌ள்ளது.

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி ஏ‌ற்கனவே 12 நா‌ட்க‌ள் தொடர் உண்ணாவிர த‌ப ் போராட்டம் நடத்த ிய கடலோர ‌கிராம‌ம‌க்க‌ள், கட‌ந்த ஞா‌யிறு முத‌ல் ஒரு நா‌ள் உ‌ண்ணா‌‌விரத‌ம் இரு‌ந்தன‌ர்.

ஆனா‌ல் இ‌ந்த ‌உ‌ண்ணா‌விரத‌‌ப் போரா‌ட்ட‌ம் 3 நா‌ட்களாக ‌நீடி‌த்தது. நெ‌ல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரம் பேர் உ‌ண்ணா‌விரத‌ப் போராட ்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இ‌‌தி‌ல் 106 பேர் தொட‌ர் உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்தை தொட‌ங்‌கியு‌ள்ளதா‌ல் மிகவும் சோர்வடைந்து காணப் படு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இடிந்தகரை பாதிரியார் பங்களாவில் நே‌ற்று நட‌ந்த ஆலோசனை கூட் ட‌த்‌தி‌ற்கு ‌பிறகு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய போராட்ட குழு தலைவ‌ர் உதயகுமார ், 3 நாளில் எங்களது கோரிக்கையை ஏற்று, அணுமின் நிலைய பணிகளை மத்திய அரசு நிறுத்தவில்லை. இதனால் உண்ணாவிரதத்தை தொடர முடிவெடுத்து உள்ளோம் எ‌ன்றா‌ர்.

தமிழக அமைச்சரவை தீர்மானமும், அணுமின் நிலைய பணிகளை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால், அந்த தீர்மானத்துக்கு பின்னர் தமிழக அரசு சார்பில் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை எ‌ன்று உதயகுமா‌ர் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

உண்ணாவிரதத்தை நீடிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம் எ‌ன்று கூ‌றிய உதயகுமா‌‌ர், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது அர‌சுக‌ளி‌ன் கையில்தான் உள்ளது எ‌ன்றா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments