ஓபிஎஸ் பிரச்சார வாகனம் விபத்து – ஓட்டுனர் & உதவியாளர் காயம் !

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (13:16 IST)
துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் பிரச்சார வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனக்கென தனியாக பிரச்சார வேன் ஒன்றை வைத்துள்ளார். சில தினங்களுக்கு ஊட்டிக்கு சென்ற அவர் அங்கு அந்த பிரச்சார வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஊட்டியில் பிரச்சாரத்தை முடித்த அவர் இப்போது தேனிக்கு சென்றுள்ளார்.

ஊட்டியில் இருந்த அவரது பிரச்சார வேன் அங்கிருந்து கூடலூருக்கு எடுத்து செல்லப்பட்டது. அதில் ஓபிஎஸ்ஸின் உதவியாளர் ஒருவரும் ஓட்டுனரும் மட்டுமே சென்றனர். ஊட்டியின் நடுவட்டத்தில் திரும்பும்போது அந்த வேன் எதிர்பாராத விதமாக நிலைகுலைந்து கவிழ்ந்துள்ளது.

அதில் இருந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊட்டியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

காங்கிரஸ் கேட்ட 70 சீட்!.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த மு.க.ஸ்டாலின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments