Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா.விசாரணதான் தேவை, அரசியல் தீர்வு அல்ல: சீமான்

Webdunia
புதன், 1 ஜூன் 2011 (20:32 IST)
FILE
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீது இந்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈழத் தமிழர்கள் எதிர்பார்ப்பது ஐ.நா.விசாரணையைத்தானே தவிர, அரசியல் தீர்வை அல்ல என்று கூறியுள்ளார்.

இலங்க ை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேயின் டெல்லி பயணம் குறித்த ு நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அறிக்கை.

இலங்க ை முன்னாள் பிரதமரும ், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே இரண்ட ு நாள் பயணமாக டெல்லி வந்து விட்டுச் சென்றுள்ளார். இந்திய அயலுறவு அமைச்சர ் எஸ்.எம்.கிருஷ்ண ா, இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோரை சந்தித்துப ் பேசியதாகக் கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்க ே, அவர்களுடன் என்ன பேசினார் என்ற விவரம ் எதையும் வெளியிடவில்லை. இந்திய அரசின் அழைப்பின் பேரில் டெல்லி வந்த ரணில ் விக்கிரமசிங்கேயுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை என்ன என்பதை அயலுறவ ு அமைச்சரும் வெளிப்படுத்தவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் எப்போதும ் கடைபிடித்துவரும் மூடு மந்திரச் செயல்பாட்டை இன்னமும் இந்திய அரசு தொடர்ந்த ு கொண்டுதான் இருக்கிறது.ஆனால ், நேற்று இரவு கொழும்பில் அங்குள்ள செய்தியாளர்களிடம ் பேசுகையில் விக்கிரமசிங்க ே, வெளியிட்ட விவரங்களைப் பார்க்கும்போத ு, இலங்கையில ் நடந்த போர் தொடர்பாக ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை குறித்தும ், ஈழத ் தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வுத்திட்டம் குறித்தும் பேசியுள்ளார்கள்.

ஈழத ் தமிழர்களோ அல்லது அவர்களின் விடுதலைப் போராட்டத்தை முழு மனதுடன் ஆதரித்துவரும ் தமிழகத் தமிழர்களோ இந்திய அரசிடம் இருந்து எந்த அரசியல் தீர்வையும ் எதிர்பார்க்கவில்லை என்பதை நாம் தமிழர் கட்சி தெளிவுபடத் தெரிவித்துக்கொள்கிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள - பெளத்த இனவெறி சிறிலங்க அரசு நடத்தி ய தமிழின அழிப்புப் போருக்கு எல்லாவிதத்திலும் துணையாக நின்ற இந்திய அரச ு, ஈழத ் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றித் தரும் என்பது ஏமாற்ற ு வேலையே.

உலகத் தமிழர்கள ், மற்றும் உலகெங்கும் வாழும் மனித நேயமிக்கவர்கள் அனைவரத ு எதிர்பார்ப்பும் கோரிக்கையும ், சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்து பன்னாட்ட ு நிபுணர் குழுவை அமைத்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்பதேயாகும். ஐ.நா. பொதுச ் செயலர் பான் கி மூன் கூறியதைப்போல ், அங்கு நடந்த போர்க் குற்றம் உள்ளிட் ட மனிதாபிமான அத்துமீறல்களுக்குக் காரணமானவர்களை கண்டுபிடித்துப் பொறுப்பாக்க ி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்காமல ், சிறிலங்க அரசு முன்னெடுக்கும் எந் த அரசியல் இணக்கப்பாடும் அந்நாட்டில் அமைதியைய ோ, நீடித்த அரசியல் தீ்ர்வைய ோ உருவாக்காது என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

இராஜீவ ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தீர்வாகாது

தமிழ்நாட்டுத ் தமிழர்களின் ஏகோபித்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்ட ு, 1987 ஆம் ஆண்டு தமிழினப ் பிரச்சனையில் தலையிட்ட இந்திய அரச ு, தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு தீர்வுத ் திட்டத்தை (இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம்) அவர்களின் மீது திணித்தது. அத ு மட்டுமின்ற ி, அந்த ஒப்பந்தத்த ை, இந்தியாவின் மீது கொண்ட மதிப்பால் ஒப்புக்கொள்வதா க தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்த பின்னரும ், நடுநிலையில் நின்ற ு ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல ், ஜெயவர்த்தனே அரசின் பேரினவாத நோக்கத்தை நிறைவேற் ற புலிகளுக்கு எதிராகவே திரும்பியது. அதன் விளைவாக ஏற்பட்ட மோதலில் 12,000த்திற்கும ் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். சிறிலங் க இனவெறி அரசு முன்னெடுத்த தமிழினப் படுகொலைய ை, அமைதி காக்கச் சென்ற இந்திய அரசின ் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்தன. ஆ க, இந்தியாவின் தலையீடு ஈழத் தமிழரின் விடுதலைப ் போராட்டத்தை பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளியது.மட்டுமின்ற ி, தமிழின அழிப்ப ை திட்டமிட்டு நிறைவேற்றிவந்த சிறிலங்க அரசை பலவீனப்படுத்துவதற்கு பதிலாக அதன் நிலைய ை சர்வதேச அளவில் பலப்படுத்தியது.

இந் த நிலையில ், இலங்கை அரசுக்கும ், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்த ை நடந்தபோது அதற்கு ஆதரவு மட்டும் தெரிவித்துவிட்டு ஒதுங்கி நின்ற இந்திய அரச ு, மகிந்த ராஜபகஷே அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றப் பிறகு மீண்டும் அவரோடு இணைந்த ு இரகசியமாக திட்டம் தீட்டி தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை அழிக் க முற்பட்டது என்பதைத்தான் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான விக்கிலீக்ஸ் இணையத்தளம ் வெளியிட்ட அமெரிக்க ஆவணத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

ராஜபக் ச அரசு திட்டமிட்டு நடத்திய தமிழின அழிப்புப் போருக்கு எல்லா விதத்திலும் உதவ ி, தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த முயன்ற பன்னாட்டு அரசுகளின் அழுத்தத்தை தடுத்த ு நிறுத்த ி, ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலைக்கு முழுமையாகத் துணை நின்றது இந்தி ய அரசு. போருக்குப் பின் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்பது குறித்த ு எதையும் பேசாமல ், சிறிலங்க அரசுடன் வணிக ஒப்பந்தங்களைப் போடுவதற்கு மட்டுமே முழ ு முயற்சி மேற்கொண்டுவந்த இந்திய அரச ு, இன்று ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை அளித்ததால ் உருவான நெருக்கடியில் இருந்த தன்னையும ், சிறிலங்க அரசையும் காப்பாற்றிக்கொள் ள மீண்டும் அரசியல் தீர்வு எனும் ஏமாற்று ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. அந் த சூழ்ச்சியை நிறைவேற்றவ ே, முதலில் அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ் உடன ் பேச்சுவார்த்தை நடத்தியது. இப்போது அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரான ரணில ் விக்கிரமசிங்கேயை அழைத்துப் பேசியுள்ளது.

ஏதாவது ஒரு தீர்வுத் திட்டத்தை தமிழர்கள ் மீது திணித்துவிட்ட ு, தாங்கள் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட்டதா க உலகை ஏமாற்ற நினைக்கிறது டெல்லி. அவ்வாறு செய்வதன் மூலம ், ஐ.நா.நிபுணர் குழ ு அறிக்கைய ை, ஒரு தேவையற்ற தலையீடாக காட்ட முற்படுகிறது. இதன் மூலம் ஒரே கல்லில ் இரண்டு மாங்காய் அடித்துவிட திட்டமிடுகிறது. ஆனால் தமிழர்கள் ஒன்றும் ஏதும் புரியா த ஏமாளிகள் என்று எண்ணுவதை புதுடெல்லி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றுள் ள நிலையில ், தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம ் பெறாமல ், எந்த அரசியல் தீர்வு குறித்தும் சிறிலங்க இனவெறி அரசுடனோ அல்லது அதற்க ு துணைபோன இந்திய அரசுடனோ உலகத் தமிழினம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதை டெல்ல ி புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழர்களுக்கு எதிராக டெல்லி கடைபிடித்துவரும் இலங்க ை ஆதரவுக் கொள்கைக்கு எதிராகத்தான் நடந்த முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில ் காங்கிரஸ் கட்சிக்கும ், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் அளித்த படுதோல்வியின் மூலம ் தமிழக மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள் என்பதை டெல்லி காங்கிரஸ் அரச ு மறந்துவிடக்கூடாது.

எனவ ே, இந்தியாவின் இறையாண்மையை மதித்து ஜனநாயகப் பூர்வமாக தங்கள ் தீர்ப்பை அளித்த தமிழ்நாட்டு மக்களை டெல்லி காங்கிரஸ் அரசு மதிப்பதாக இருந்தால ், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீதான தனது நிலைப்பாடு என் ன? ஆதரிக்கிறதா அல்லத ு எதிர்க்கிறத ா? என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்குத் தேவ ை பன்னாட்டு விசாரணைய ே, இந்தியாவின் அரசியல் தீர்வல்ல என்பதைத் தெரிவித்துக ் கொள்கிறேன்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments