Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 13 – தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2011 (18:39 IST)
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி புதன் கிழமை ஒரே நாளில் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் எஸ்.ஒய். குரேஷி அறிவித்தார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெறும் அதே நாளில் புதுவை, கேரள மாநிலங்களின் சட்டப் பேரவைக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

இந்த மூன்று மாநிலங்களிலும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 19ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் குரேஷி கூறியுள்ளார்.

தமிழ்நாடு, கேரளம், புதுவை மட்டுமின்றி அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகளை குரேஷி அறிவித்தார்.

அஸ்ஸாம் மாநில சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 4, 13 தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். முதல் கட்டத் தேர்தலில் 62 தொகுதிகளிலும், 2வது கட்டத் தேர்தலில் 64 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று குரேஷி அறிவித்தார்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு 6 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் குரேஷி அறிவித்தார்.

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு முடிந்த பிறகு மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி அறிவித்தார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments