Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ண்ணா‌விர‌த‌த்தை ‌வில‌க்‌கி‌க் கொ‌‌ண்டா‌ர் நளினி

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2009 (09:13 IST)
மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌‌ஜீ‌வ் கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் 18 ஆ‌ண்டுகளாக ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள த‌ன்னை ‌விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வேலூர் ‌சிறை‌யி‌ல் உ‌‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வ‌ந்த நளினி, ‌சிறை‌த்துறை அ‌திகா‌ரிக‌ளி‌ன் கோ‌ரி‌க்கையை ஏ‌ற்று தனது உ‌ண்ணா‌விரத‌த்தை இ‌ன்று ‌வில‌க்‌கி‌க் கொ‌ண்டா‌ர்.

webdunia photo
WD
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. வேலூர் மகளிர் ‌சிறை‌யில் அடைக்கப்பட்டு உள்ள அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை கருணை அடிப்படையில் ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதுவரை 18 ஆண்டுகளாக ‌சிறை‌யி‌ல் இருக்கும் நளினி தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ‌நீ‌திம‌ன்ற‌த்‌திலு‌ம் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தனது கோரிக்கையை வலியுறுத்தி நளினி நேற்று முன்தினம் திடீரென்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். நேற்று 2-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.

இ‌‌ன்று 3வது நாளாக உ‌ண்ணா‌விர‌த‌ம் தொட‌ங்‌கிய ந‌ளி‌னி‌யிட‌ம், ‌சிறை‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் பே‌ச்சுவா‌‌ர்‌த்தை நட‌த்‌தின‌ர். அ‌ப்போது, உ‌ங்களது கோ‌ரி‌க்கையை அர‌சிட‌ம் தெ‌ரி‌வி‌ப்பதாக உறு‌தி அ‌ளி‌த்தன‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து தனது உ‌ண்ணா‌விரத‌‌த்தை ‌ந‌ளி‌னி ‌வில‌க்‌கி‌க் கொ‌ண்டா‌‌ர்.

இத‌னிடையே ராஜீவ் காந்தி கொலைவழக்கில் வேலூர் ஆண்கள் ‌சிறை‌யி‌ல் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ ், த‌ன்னை ‌விடுதலை செ‌ய்ய‌க் கோ‌ரி நேற்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.

அவ‌ரிட‌ம் ‌ சிறை‌த்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் சேகர் பே‌ச்சுவா‌‌‌ர்‌த்தை நட‌த்‌தினா‌ர். அ‌ப்போது, ' உங்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவிக்கிறேன்' என்று உறுதி அளித்ததை தொடர்ந்து ராபர்ட் பயஸ் தனது உண்ணாவிரதத்தை ‌ வில‌க்‌கி‌க் கொ‌ண்டா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments