Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்ணாவிரதம் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளை விடுதலை செய்க: சீமான்

Webdunia
திங்கள், 2 மே 2011 (14:25 IST)
பூந்தமல்லி சிறப்பு முகாமில் வழக்கேதுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் 4 பேரையும் உடனடியாக விடுவிக்குமாறு நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “செங்கல்பட்ட ு முகாமில் 23 ஈழத் தமிழர்களும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமில் 4 ஈழத் தமிழர்களும் தமிழக அரசால் அடைத்த ு வைக்கப் பட்டுள்ளனர். மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற் ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும ், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களை சட்டத்திற்குப் புறம்பாக சிறப்பு முகாம் என்ற பெயரில ் அங்கு அடைத்து வைத்துள்ளது.

இந்நிலையில ் கங்காதரன ், சந்திரகுமார ், அமலன ், ஜெயமோகன் ஆகிய 4 பேரும் தங்களை விடுவிக்கக் கோர ி பூந்தமல்லி முகாமில் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆனால ் இவர்களின் கூக்குரல் இதுவரை தமிழக அரசுக்கு எட்டவில்லை அல்லது எட்டினாலும் ஒன்றும ே நடக்காதது போல கள்ள மவுனம் காத்து வருகிறது.

நாட்டில் நடப்பது தொடர் அரசு தான ்; காபந்து அரசு அல்ல. இது உலகுக்குத் தெரியும் என பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமா க அறிக்கை எழுதி நான் தான் இப்பொழுதும் முதல்வர் என தினமும் மக்களுக்கு நினைவூட்டும ் முதல்வர ், மக்களின் மீதான உண்மையான அக்கறையை செயல்பாட்டில் காட் ட வேண்டும். அதனை விடுத்து நாட்டில் மின்வெட்ட ு, விலைவாசி உயர்வு என ஆயிரக்கணக்கா ன மக்கள் பிரச்சனைகள் இருந்தாலும் அதில் கவனம் செலுத்தாமல் விரயமாக ஆயிரம் கோட ி மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகத்தில் அமர்ந்து மீன்களுக்க ு பொறி பொட்டுக் கொண்டிருக்கிறார். மீன்களின் உயிரின் மீது காட்டும் அக்கறையில ் சிறிதளவாவது நம் அனைவரின் கண் முன்னும் சாகக் கிடக்கும் எம் சொந்தங்களின் மீத ு காட்ட வேண்டும். ஆகவே உடனே தமிழக அரசு உண்ணாவிரதம் இருக்கும் பூந்தமல்லி மற்றும ் செங்கல்பட்டு அகதிகளை விடுதலை செய்ய வேண்டும ்” என்று சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments