Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையான்குடி இடைத்தேர்தலை தடை செய்யக்கோரி வழக்கு

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (16:08 IST)
நடைபெற இருக்கும் இளையான்குடி சட்டமன்ற இட ைத்தேர்தலை தடை செய்யக்கோரி சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

ஆக‌ஸ்‌ட ் 18 ஆ‌ம ் தே‌‌த ி நடைபெ ற உ‌ள் ள இளையான்குடி சட்டமன்ற இடைத்தேர் த‌‌ லி‌ல ் ‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல ் சுப.மதியர ச‌‌ ன், த ே. ம ு.‌ த ி.க. சா‌ர்‌பி‌ல ் அழகு பாலகிருஷ் ண‌ ன், ப ா.ஜ.க. சா‌ர்‌பி‌ல ் ராஜேந்திரன் உள்பட 9 பேர் போட்டியிடுக ி‌ ன்றன‌ர ்.

இந்த தொகுதியில் போ‌ட்டி‌யி ட மனு‌த ் தா‌க்க‌ல ் செ‌ய் த மக்கள் மாநாடு கட்சி வேட்பாளர் கே.கலைமணியின் மனு நிராகரிக்கப்பட்டது.

இ‌‌ந்‌நிலை‌யி‌ல ் மக்கள் மாநாடு கட்சி வேட்பா ள‌ ரி‌ன ் வேட்புமனுவை ஏற்க வேண்டும் என்றும், அதுவரை இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அ‌க்கட்சி செயலர் சதீஷ்குமார ், சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்து‌ள் ள மனுவில ், கடந்த 16ஆ‌ம ் தேதி கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம், பர்கூர், தொண்டாமுத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய‌ம ் அறிவித்தது. இந்த தேர்தலுக்கு எங்கள் கட்சியை சேர்ந்த கலைமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு பரிசீலனையின்போது அவர் மரு‌த்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். எனவே வேட்புமனு பரிசீலனையில் அவரது சார்பாக அருள்மொழியை கலந்து கொள்ளுமாறு தெரிவித்தார்.

முன்மொழிந்தவரின் வாக்காளர் பட்டியல் வரிசை எண் தவறாக இருப்பதாக கூறி எங்கள் கட்சி வேட்பாளர் கலைமணியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார். இதை அறிந்த கலைமணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். முன்மொழிந்தவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தாலே போதுமானது. எனவே மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதே போன்ற பிரச்சனை பர்கூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஏற்பட்டபோது தேர்தல் ஆணைய‌ம ் உத்தரவின் பேரில், வேட்பு மனுக்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் எங்கள் கட்சி விஷயத்தில் மட்டும் மறுபரிசீலனை செய்யப்படவில்லை. ஆகவே மறுபரிசீலனை செய்து எங்கள் கட்சி வேட்பாளர் கலைமணியின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வழக்கு முடியும்வரை இளையான்குடி இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எ‌ன்ற ு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மன ு ‌ நீ‌திப‌த ி கே.சுகுணா மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. அ‌ப்போத ு இந்த மனு செவ்வாய்க்கிழமை (இ‌ன்ற ு) மீண்டும் விசாரணைக்கு எடு‌த்து‌க ் கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ நீ‌திப‌த ி அ‌றி‌‌வி‌த்தா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments