Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை‌த் தமிழர் பிரச்சனை: சி.டி.யை வெளியிட ‌நீ‌திம‌‌ன்ற‌ம் அனுமதி

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2009 (12:35 IST)
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை தொட‌ர்பாக பெ‌ரியா‌ர் ‌திரா‌விட கழக‌ம் தயா‌ரி‌த்த ‌சி.‌டி.யை வெ‌ளி‌யிட செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி வழ‌ங்‌கியு‌ள்ளது.

பெரியார் திராவிட கழகம் சார்பில், இலங்க ை‌த் தமிழர் பிரச்சனை குறித்த 'இனி என்ன செய்ய போகிறோம ்' என்ற சி.டி.யை தயாரித்தது. இந்த சி.டி.யை தேர்தல் சமயத்தில் வெ‌ளி‌யிட மாம்பலம் காவ‌ல்துறை‌ அனுமதி மறு‌த்து‌வி‌ட்டது.

இதை எதிர்த்து தென்சென்னை மாவட்ட பெரியார் திராவிட கழக தலைவர் தபசிகுமரன ், சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌த ில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை ‌விசா‌ரி‌த்து ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த நீதிபதி கே.சுகுணா, இலங்க ை‌த் தமிழர் பிரச்சனை தொட‌ர்பான சி.டி.யை வெளியிடஅனுமதி மறுத்து மாம்பலம் காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் பிறப்பித்த உத்தரவை ரத்து செ‌ய்தா‌ர்.

மேலு‌ம் வெளியீட்டு விழாவுக்காக, ஒரு வாரத்திற்குள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு விண்ணப்பித்த மனுவை 4 நாட்களுக்குள் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து காவ‌ல்துறை‌யின‌ர் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் தீர்ப்ப‌ளி‌த்தா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments