Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனப்படுகொலை என்றே விசாரிக்க வேண்டும்: மே 17 கோரிக்கை

Webdunia
புதன், 1 ஜூன் 2011 (20:18 IST)
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய போரில் நிகழ்ந்தது வெறும் போர்க் குற்றம் அல்ல, அது திட்டமிட்ட இனப்படுகொலை என்றே விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலருக்கு மே 17 இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மே 17 இயக்கம் விடுத்துள்ள அறிக்கை வருமாற ு:

சர்வதே ச சமூகத்திற்கும ், தமிழினத்திற்கும ் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையும் வேண்டுகோளும்.

மே பதினேழு இயக்கம் ஐ. ந ா. வினுடைய நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழீழ இனப்படுகொலையில் ஒரு குறைந்தபட்ச ஒரு ஆரம்ப முயற்சியாக வரவேற்கிறத ு. இந்த அறிக்க ை, போர் பற்றிய இலங்கை அரசின் குற்றங்களை பதிவு செய்யும் முக்கிய ஒரு அறிக்கையாக பார்த்தாலும் ஒரு முழுமையடையாத ஒன்றாக பார்க்கிறத ு.

தமிழீழத்தில் நடைபெற்ற போர் எனப்படுவது ஒரு இனப்படுகொலை அடிப்படையிலான போர ். இதன் பின்னனியா க 60 ஆண்டுகால விடுதலை போராட்டம் உள்ளது என்பதை அங்கீகரிக்க வேண்டும ். போரில ் 1,46,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது என்பது மட்டுமன்ற ி 1,00,000 தமிழர்கள் கடந் த 30 ஆண்டுகளாக இந் த விடுதலை கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசால் படுகொலைக்கு உள்ளாயினர ். ஆ க 2,50,000 க்கும் மேலாக தமிழர்களை படுகொலை செய்த அரசின் முக்கிய நோக்கமானது தமிழீழத ் தமிழர்களின் விடுதலை கோரிக்கையை முடக்கவே என்பதை ஐ. நா மன்றம் அங்கீகரித்தல் அவசியம ்.

தந்தை செல்வா அவர்களின் தலைமையில் தமிழீழ மக்கள் இலங்கையிலிருந்து பிரிந்து தனது சுதந்திர நாடாக தமிழீழம் அடைய வேண்டி அளித் த ”வட்டுகோட்டை தீர்மா ன” வாக்கெடுப்பை ஐ. நா கவனத்தில் எடுக்க வேண்டும ். இதன் அடிப்படையிலேயே பின்னர் நடந்த ஆயுதப ் போராட்டத்திற்கு தமிழர்கள் அங்கு துணை நின்றார்கள் என்பதை ஐ. நா அங்கீரிக்க வேண்டும ்.

வெகுகாலத்திற்கு முன்பே நடத்தி இருக்கவேண்டிய கருத்து வாக்கெடுப்பாய் வட்டுகோட்டை தீர்மானத்தையே ஐ. நா அங்கீகரிக்க வேண்டும ். இந்த நிபுணர் குழு இந்த விவரங்களை அதன் விசாரனை வரையறையில் கொண்டு வராவிட்டாலும ் , இனி வரும் விவாதங்கள் இந்த கருதுகோளின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும ். இந்த வாதங்களை புறந்தள்ளி அல்லது கணக்கில் எடுக்காமல் ஐ. ந ா (அ) சர்வதேசச் சமூகம் செயல்படுமானால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் உரிமை தமிழர் சமூகத்திற்கு உண்டு என்பதை உறுதியுடன் தெரிவிக்கின்றோம ்.

இராசபக்சே மட்டுமன்று, அதற்கு முன்னதாக இருந்த அரசான ரனில் விக்கிரமசிங்க ே, சந்திரிகா குமாரதுங்க ா, பிரேமதாச ா, ஜெயவர்த்தன ா, மற்றும் முன்னதைய இலங்கை அரசுகள் தொடர்சியாக இனப்படுகொலைகளை செய்து வந்து இருக்கிறார்கள ். இவர்களும் விசாரனைக்கு உட்படுத்தாமல் செயல்படும் ஒரு விசாரனை முழுமையானது மட்டுமன்றி, தமிழர்களுக்கான நீதியை புறந்தள்ளுவதாகவே தமிழ் சமூகம் கருதும ். ஆகவே இவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துகின்ற வகையில் ஐ. நா மற்றும் சர்வதேசச் சமூகம் நடந்துகொள்ளும் என்று நம்புகிறோம ். மேலும் இலங்கை அரசில் நடக்கும் ஒர ு ஆட்சி மாற்றமோ அல்லது தனி நபர் தண்டித்தலோ இந்த குற்றத்திற்கான தீர்வாகாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம ்.

மேலும் தமிழர்களுக்கான வாழ்வ ு, சுயமரியாத ை, பாதுகாப்ப ு, பண்பாட்டு சுதந்திரம ், மொழியுரிம ை, நிலப்பாதுகாப்ப ு, கடல் மற்றும ் இயற்கை ஆதரங்களின் பாதுகாப்பு என்பது ஒன்றுபட்ட இலங்கையில் சாத்தியம் கிடையாத ு என்பதை உலகிற்கு நாங்கள் உணர்த்த விரும்புகிறோம். அங்கு நடந்த்து ஒரு இனக்கலவரம ோ, இன முரண்களோ மட்டுமல்ல அதையும ் தாண்டி நடைபெற்ற விடுதலைப் போர் என்பத ு சர்வதேசச் சமூகத்தால் உணரப்பட்ட ு, இந்த படுகொலைகளை நடத்தியது சர்வாதிகாரிகளால ் அல்லாமல் சிங்கள பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசே என்பத ை நாங்கள் உலகிற்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

தமிழர்களின் மறுவாழ்வ ு, தாய் நிலமீட்ச ி, புதியக் கட்டுமானங்கள ் என்பது சுதந்திரத் தமிழீழத்தில் தமிழர்களாலேய ே நடத்தப்படும ். அதற்கு சர்வதேச சமூகம் துணை நிற்க வேண்டும ். இப்படியான நிரந்தர பாதுகாப்ப ு, சுயமரியாதை உறுதி செய்யப்படும் ஒர ு ’சுதந்திர தமிழீழம ே’ சர்வதேசம் தமிழர்களின ் பால் நியாயமாக நடந்து கொண்டது என்பதற்கான ஆதாரமாக அமையும ்.

ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கையினை ஒட்டி உலக அரங்கில் வர இருக்கும ் அரசியல் தீர்வ ு பற்றி ய விவாதங்களில ், தமிழர்களின் தலையா ய கோரிக்கைகளாகத ் தமிழர்கள் வலியுறுத்த வேண்டி ய பின்வருவனவற்றை தமிழ் சமூகத்தின ் முன் வைக்கிறோம ்.

· போர் குற்றவிசாரணையானத ு, இலங்கை அரசின் போரே இனப்படுகொலையின ் அடிப்படையிலான போர் எனக் கணக்கில் கொண்டு நடத்தப்பட வேண்டும். இந்த இனப்படுகொலையின ் பின்னனியில் இலங்கை அரசு இருக்கிற காரணத்தால ், இலங்கை அரசு முழுமையும் குற்றவாள ி அரசாகவே நடத்தப்பட வேண்டும். இலங்கை அரசே குற்றவாளி எனில் அது இராசபக்சே அரசுடன ் முடியாமல் வரலாற்று ரீதியாக அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் இனப்படுகொலைய ை செய்கிறது என்பது தீரவிசாரிக்கப்படல் வேண்டும்.

· வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலும ் 60 ஆண்டுகளாக நடைபெரும் தமிழீழ விடுதலை போரட்டத்தின் அடிப்படையிலும் சுதந்திரத் தமிழீழத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும ்.

அவசியமெனில் அதற்கான வாக்கெடுப்பை ஐ. நா நடத்திடல் வேண்டும ். அவ்வாறான ஒர ு வாக்கெடுப்பை நடத்தும் முன் தமிழீழத்திலுள்ள சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற்றப்படல் வேண்டும ்.

· இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்கள் ஐ. நா வசம் ஒப்படைத்தல் பட வேண்டும ். தேவைப்படில் ஐ. நா.வினுடைய அமைதி காப்புப் படைகள ், இந்தி ய- பாகிஸ்தானி ய- அமெரிக்கப் தலைமை மற்றும் படைவீரர்கள் அற்ற ஒரு ஐ. நா படையே அங்கு அனுப்பப்படல் வேண்டும ்.

· போர ்- இனப்படுகொலை சிதைவுகளில் இருந்து மீளப்பெற சுதந்திர தமிழீழத்திற்கான இழப்பீட்டுத் தொகையை இலங்கை அரசிடம் இருந்து சர்வதேசச் சமூகம் பெற்றுத்தர வேண்டும ்.

· உயிருடன் இருக்கும் இலங்கையின் முன்னால் அரச அதிபர்களான சந்திரிகா குமரத்துங்க ா, ரணில் விக்கிரமசிங்கே போன்றவர்களையும் இராசபக்சேவுடன் சேர்த்து சர்வதேசச் சமூகம் இனப்ப்படுகொலைக்கான விசாரணை நடத்தப்பட வேண்டும ்.

· தமிழர் பகுதிகளில் செயல்படும் ஒட்டுக்குழுக்கள் முழுமையாக கலைக்கப்பட்டு அதன் குற்றவாளித் தலைமைகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும ்.

· வெள்ளைவேன் கடத்தலின் பின்புலம் விசாரிக்கப்படல் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, சென்னை தியாகராயல் நகரில் மே 17 இயக்கத்தின் சார்பில் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீது நடந்த கருத்தரங்கில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments