Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனப்படுகொலை என்றே விசாரிக்க வேண்டும்: மே 17 கோரிக்கை

இனப்படுகொலை என்றே விசாரிக்க வேண்டும்: மே 17 கோரிக்கை
, புதன், 1 ஜூன் 2011 (20:18 IST)
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய போரில் நிகழ்ந்தது வெறும் போர்க் குற்றம் அல்ல, அது திட்டமிட்ட இனப்படுகொலை என்றே விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலருக்கு மே 17 இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மே 17 இயக்கம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சர்வதேசமூகத்திற்கும், தமிழினத்திற்குமமே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையும் வேண்டுகோளும்.

மே பதினேழு இயக்கம் ஐ. ா.வினுடைய நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழீழ இனப்படுகொலையில் ஒரு குறைந்தபட்ச ஒரு ஆரம்ப முயற்சியாக வரவேற்கிறது. இந்த அறிக்கை, போர் பற்றிய இலங்கை அரசின் குற்றங்களை பதிவு செய்யும் முக்கிய ஒரு அறிக்கையாக பார்த்தாலும் ஒரு முழுமையடையாத ஒன்றாக பார்க்கிறது.

தமிழீழத்தில் நடைபெற்ற போர் எனப்படுவது ஒரு இனப்படுகொலை அடிப்படையிலான போர். இதன் பின்னனியாக 60 ஆண்டுகால விடுதலை போராட்டம் உள்ளது என்பதை அங்கீகரிக்க வேண்டும். போரில் 1,46,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது என்பது மட்டுமன்றி 1,00,000 தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்விடுதலை கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசால் படுகொலைக்கு உள்ளாயினர். க 2,50,000க்கும் மேலாக தமிழர்களை படுகொலை செய்த அரசின் முக்கிய நோக்கமானது தமிழீழததமிழர்களின் விடுதலை கோரிக்கையை முடக்கவே என்பதை ஐ. நா மன்றம் அங்கீகரித்தல் அவசியம்.

தந்தை செல்வா அவர்களின் தலைமையில் தமிழீழ மக்கள் இலங்கையிலிருந்து பிரிந்து தனது சுதந்திர நாடாக தமிழீழம் அடைய வேண்டி அளித்”வட்டுகோட்டை தீர்மான” வாக்கெடுப்பை ஐ. நா கவனத்தில் எடுக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே பின்னர் நடந்த ஆயுதபபோராட்டத்திற்கு தமிழர்கள் அங்கு துணை நின்றார்கள் என்பதை ஐ.நா அங்கீரிக்க வேண்டும்.

வெகுகாலத்திற்கு முன்பே நடத்தி இருக்கவேண்டிய கருத்து வாக்கெடுப்பாய் வட்டுகோட்டை தீர்மானத்தையே ஐ. நா அங்கீகரிக்க வேண்டும். இந்த நிபுணர் குழு இந்த விவரங்களை அதன் விசாரனை வரையறையில் கொண்டு வராவிட்டாலும் , இனி வரும் விவாதங்கள் இந்த கருதுகோளின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். இந்த வாதங்களை புறந்தள்ளி அல்லது கணக்கில் எடுக்காமல் ஐ. ா (அ) சர்வதேசச் சமூகம் செயல்படுமானால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் உரிமை தமிழர் சமூகத்திற்கு உண்டு என்பதை உறுதியுடன் தெரிவிக்கின்றோம்.

இராசபக்சே மட்டுமன்று, அதற்கு முன்னதாக இருந்த அரசான ரனில் விக்கிரமசிங்கே, சந்திரிகா குமாரதுங்கா, பிரேமதாசா, ஜெயவர்த்தனா, மற்றும் முன்னதைய இலங்கை அரசுகள் தொடர்சியாக இனப்படுகொலைகளை செய்து வந்து இருக்கிறார்கள். இவர்களும் விசாரனைக்கு உட்படுத்தாமல் செயல்படும் ஒரு விசாரனை முழுமையானது மட்டுமன்றி, தமிழர்களுக்கான நீதியை புறந்தள்ளுவதாகவே தமிழ் சமூகம் கருதும். ஆகவே இவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துகின்ற வகையில் ஐ. நா மற்றும் சர்வதேசச் சமூகம் நடந்துகொள்ளும் என்று நம்புகிறோம். மேலும் இலங்கை அரசில் நடக்கும் ஒரஆட்சி மாற்றமோ அல்லது தனி நபர் தண்டித்தலோ இந்த குற்றத்திற்கான தீர்வாகாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

மேலும் தமிழர்களுக்கான வாழ்வு, சுயமரியாதை, பாதுகாப்பு, பண்பாட்டு சுதந்திரம், மொழியுரிமை, நிலப்பாதுகாப்பு, கடல் மற்றுமஇயற்கை ஆதரங்களின் பாதுகாப்பு என்பது ஒன்றுபட்ட இலங்கையில் சாத்தியம் கிடையாதஎன்பதை உலகிற்கு நாங்கள் உணர்த்த விரும்புகிறோம். அங்கு நடந்த்து ஒரு இனக்கலவரமோ, இன முரண்களோ மட்டுமல்ல அதையுமதாண்டி நடைபெற்ற விடுதலைப் போர் என்பதசர்வதேசச் சமூகத்தால் உணரப்பட்டு, இந்த படுகொலைகளை நடத்தியது சர்வாதிகாரிகளாலஅல்லாமல் சிங்கள பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசே என்பதநாங்கள் உலகிற்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

தமிழர்களின் மறுவாழ்வு, தாய் நிலமீட்சி, புதியக் கட்டுமானங்களஎன்பது சுதந்திரத் தமிழீழத்தில் தமிழர்களாலேயநடத்தப்படும். அதற்கு சர்வதேச சமூகம் துணை நிற்க வேண்டும். இப்படியான நிரந்தர பாதுகாப்பு, சுயமரியாதை உறுதி செய்யப்படும் ஒர’சுதந்திர தமிழீழமே’ சர்வதேசம் தமிழர்களினபால் நியாயமாக நடந்து கொண்டது என்பதற்கான ஆதாரமாக அமையும்.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையினை ஒட்டி உலக அரங்கில் வர இருக்குமஅரசியல் தீர்வபற்றிவிவாதங்களில், தமிழர்களின் தலையாகோரிக்கைகளாகததமிழர்கள் வலியுறுத்த வேண்டிபின்வருவனவற்றை தமிழ் சமூகத்தினமுன் வைக்கிறோம்.

· போர் குற்றவிசாரணையானது, இலங்கை அரசின் போரே இனப்படுகொலையினஅடிப்படையிலான போர் எனக் கணக்கில் கொண்டு நடத்தப்பட வேண்டும். இந்த இனப்படுகொலையினபின்னனியில் இலங்கை அரசு இருக்கிற காரணத்தால், இலங்கை அரசு முழுமையும் குற்றவாளி அரசாகவே நடத்தப்பட வேண்டும். இலங்கை அரசே குற்றவாளி எனில் அது இராசபக்சே அரசுடனமுடியாமல் வரலாற்று ரீதியாக அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் இனப்படுகொலையசெய்கிறது என்பது தீரவிசாரிக்கப்படல் வேண்டும்.

· வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலும் 60 ஆண்டுகளாக நடைபெரும் தமிழீழ விடுதலை போரட்டத்தின் அடிப்படையிலும் சுதந்திரத் தமிழீழத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.

அவசியமெனில் அதற்கான வாக்கெடுப்பை ஐ. நா நடத்திடல் வேண்டும். அவ்வாறான ஒரவாக்கெடுப்பை நடத்தும் முன் தமிழீழத்திலுள்ள சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற்றப்படல் வேண்டும்.

· இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்கள் ஐ. நா வசம் ஒப்படைத்தல் பட வேண்டும். தேவைப்படில் ஐ.நா.வினுடைய அமைதி காப்புப் படைகள், இந்திய-பாகிஸ்தானிய-அமெரிக்கப் தலைமை மற்றும் படைவீரர்கள் அற்ற ஒரு ஐ. நா படையே அங்கு அனுப்பப்படல் வேண்டும்.

· போர்-இனப்படுகொலை சிதைவுகளில் இருந்து மீளப்பெற சுதந்திர தமிழீழத்திற்கான இழப்பீட்டுத் தொகையை இலங்கை அரசிடம் இருந்து சர்வதேசச் சமூகம் பெற்றுத்தர வேண்டும்.

· உயிருடன் இருக்கும் இலங்கையின் முன்னால் அரச அதிபர்களான சந்திரிகா குமரத்துங்கா, ரணில் விக்கிரமசிங்கே போன்றவர்களையும் இராசபக்சேவுடன் சேர்த்து சர்வதேசச் சமூகம் இனப்ப்படுகொலைக்கான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

· தமிழர் பகுதிகளில் செயல்படும் ஒட்டுக்குழுக்கள் முழுமையாக கலைக்கப்பட்டு அதன் குற்றவாளித் தலைமைகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

· வெள்ளைவேன் கடத்தலின் பின்புலம் விசாரிக்கப்படல் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, சென்னை தியாகராயல் நகரில் மே 17 இயக்கத்தின் சார்பில் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீது நடந்த கருத்தரங்கில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil