Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்து சமய அறநிலையத்துறை சா‌ர்‌பி‌ல் பூசா‌‌ரிகளு‌க்கு ‌நி‌தி உத‌வி

இந்து சமய அறநிலையத்துறை சா‌ர்‌பி‌ல் பூசா‌‌ரிகளு‌க்கு ‌நி‌தி உத‌வி
செ‌ன்னை , வியாழன், 18 ஜூன் 2009 (16:59 IST)
இந்து சமய அறநிலையத்துறை சா‌ர்‌‌பி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌கிராம‌க் கோ‌யி‌ல் பூசா‌ரிக‌ள் நல வா‌ரிய‌ம் மூல‌ம் பூசா‌ரிக‌‌ள், அவரது குடு‌ம்ப‌த்‌தினரு‌க்கு நல‌த்‌தி‌ட்ட உத‌விக‌ள் வழ‌ங்கு‌ம் ‌விழா நாளை செ‌ன்னை‌யி‌ல் நடைபெறு‌கிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களிலபூசை செ‌ய்யும் பூசாரிகள் நலன்கருதி “கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியம்” இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில், 9 அலுவல்சார் மற்றும் 10 அலுவல்சாரா உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறத் திருக்கோயில்களில் பூஜை செ‌ய்யும் 35,863 பூசாரிகள் இதுவரை உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 25.2.2009 அன்று அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்த நல வாரியம் மூலம் கிராமக்கோயில் பூசாரிகளுக்கு மூக்குக்கண்ணாடி வாங்குவதற்கு ரூ.500, அவரது குழந்தைகளின் உயர் கல்விக்கு ரூ.1000 முதல் ரூ.6000 வரை உதவி, திருமணத்திற்கு நிதி உதவி ரூ.6000,

மகப்பேறு-கருச்சிதைவுகருக் கலைப்பிற்கு நிதி உதவியாக மாதம் ஒன்றுக்கு ரூ.1000வீதம் 6 மாதங்களுக்கு மொத்தம் ரூ.6000 மற்றும் உறுப்பினர் மரணமடைந்தால் அவரது இறுதி சடங்கிற்கு ரூ.2000-மும், வாரிசுதாரருக்கு நிதி உதவி ரூ.15,000 வழங்கிட திட்டங்களும் மற்றும் உறுப்பினருக்கு விபத்து ஏற்படின், குழுக் காப்பீட்டுத் திட்டத்தின்மூலம் ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கும் நிதி உதவி போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

சென்னை, அடையாறு அருள்மிகு அனந்தபத்மநாபசுவாமி திருக்கோயில், அனந்த மண்டபத்தில், வரு‌ம் 19ஆ‌ம் தே‌தி மாலை நடைபெறும் விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முதற்கட்டமாக 126 பூசாரிகளுக்கு மூக்குக் கண்ணாடி வாங்கிட நிதி உதவியும், 24 பூசாரிகளின் மகன், மகளின் திருமணத்திற்கு நிதி உதவியும், 52 பூசாரிகளின் குழந்தைகளின் உயர்கல்விக்கு நிதி உதவியும், இறந்துபோன பூசாரி ஒருவரின் வாரிசுக்கு நிதி உதவி உட்பட, நலத் திட்ட உதவிகள் தேவைப்படும் 202 பூசாரிகளுக்கு மொத்தம் ரூ. 2.93 இலட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

விழாவி‌ற்கு தமி‌ழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செ‌ய்தித்துறை செயலர் முத்துசாமி தலைமை வகிக்கிறார். இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் ப.ரா. சம்பத் வா‌ழ்‌த்துரை வழங்க உள்ளார்.

விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், பூசாரிகள் நல வாரிய அலுவல் சார் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் கலந்து கொள்‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil