Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடை‌த்தே‌ர்த‌ல் : இறுதி வே‌‌ட்பாள‌ர் பட்டியல் வெளியீடு

இடை‌த்தே‌ர்த‌ல் : இறுதி வே‌‌ட்பாள‌ர் பட்டியல் வெளியீடு
சென்னை , சனி, 1 ஆகஸ்ட் 2009 (16:20 IST)
த‌மிழக‌த்த‌ி‌ல் ஆக‌ஸ்‌ட் 18ஆ‌ம் த‌ே‌தி நடைபெற உ‌ள்ள 5 தொகு‌திகளு‌க்கான இடை‌த்தே‌‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் இறு‌தி வே‌‌ட்பாள‌ர்க‌ள் ப‌ட்டியலை தே‌ர்த‌ல் ஆணைய‌‌ம் இ‌ன்று ‌பி‌ற்பக‌‌லி‌ல் வெ‌ளி‌‌யி‌ட்டது.

பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆ‌கிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரு‌ம் 18ஆ‌ம் தே‌தி நடைபெறு‌கிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த மாத‌ம் 22ஆ‌ம் தேதி முதல் 29ஆ‌ம் தேதி வரை டந்தது.

5 தொகுதிகளிலும் போட்டியிட மொத்தம் 160 பேர் வேட்பு மனு‌த்தாக்கல் செய்‌திரு‌ந்தனர். மனுக்கள் 30ஆ‌ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டன. இதில் 53 மனுக்கள் ‌நிராக‌ரி‌க்க‌ப்ப‌ட்டது. 67 மனுக்கள் ஏற்று‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டது.

போட்டியிட விரும்பாதவர்கள் வேட்பு மனுக்களை இன்று மாலை 3 ம‌ணி வரை வாப‌ஸ் பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று தே‌ர்த‌ல் ஆணைய‌ம் அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தது. இதை‌த் தொட‌‌ர்‌ந்து இன்று ‌‌‌பி‌ற்பக‌ல் 3.15 ‌ம‌ணி‌க்கு வே‌ட்பாள‌ர்க‌ளி‌ன் இறு‌தி‌ப் ப‌ட்டி‌யலை தே‌ர்த‌ல் ஆணைய‌ம் வெ‌ளி‌யி‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil