Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடஒதுக்கீ‌‌ட்டு‌க்கு எ‌திராக தமிழக அரசு -கொளத்தூர் மணி கு‌ற்ற‌ச்சா‌ற்று

இடஒதுக்கீ‌‌ட்டு‌க்கு எ‌திராக தமிழக அரசு -கொளத்தூர் மணி கு‌ற்ற‌ச்சா‌ற்று
, வெள்ளி, 14 டிசம்பர் 2012 (14:23 IST)
FILE
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நடைபெற உள்ள பட்டதாரி மற்றும் ஆரம்ப ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் முற்றிலும் புறக்கணித்து உள்ளதோடு, திட்டமிட்டே இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இதுவரை மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையையும், பாட வாரியான பணியிடங்களின் எண்ணிக்கையையும், மட்டுமே வெளியிட்டிருக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம், மொத்தப் பணியிடங்களில் இடஒதுக்கீட்டின்படி வகுப்புவாரியாக பணியிடங்களின் எண்ணிக்கையையும், பாடவாரியாக இடஒதுக்கீட்டு பகிர்வின் படியான பணியிடங்களின் எண்ணிக்கையையும் திட்டமிட்டே வெளியிடாமல் மறைத்து வருகிறது.

எந்த ஒரு அரசு பணி நியமனத்திலும் ‘இடஒதுக்கீடு’ என்பது உயிர்நாடியானதாகும். ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் மூலம் வெற்றி பெற்றவர்களில் உயர் மதிப்பெண்களின் அடிப்படையில் பொதுப்பிரிவு இடங்களில் எத்தனை பேர் இடம் பெறுகிறார்கள், வகுப்பு வாரியான இடஒதுக்கீட்டில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள், பாடவாரியாகவும், வகுப்புவாரியாகவும் தற்போது நியமிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் மீதி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிடவேண்டும்.

தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வழங்கி உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியான, வகுப்புவாரியான தகுதி மதிப்பெண்களை தனித்தனியே வழங்காமல், NCTE விதிமுறைகளிலேயே இல்லாத மறுதகுதித் தேர்வை நடத்தியது மிகப் பெரிய சட்ட மோசடியாகும்.

அண்மையில் தான் முதுகலை ஆசிரியர் பணி நியமனப் பட்டியலின் இடஒதுக்கீட்டு குளறுபடிகளுக்காக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இடஒதுக்கீட்டுக்கு எதிரான போக்கையே தமிழக ஆசிரியர் வாரியத்தின் தலைவர் சுர்ஜித் சவுத்திரி மேற்கொண்டு வருகிறார். சமூக நீதி சட்டங்களுக்கு இந்தியத் துணைக்கண்டத்துக்கே வழிகாட்டியாக உள்ளது தமிழ்நாடு. எனவே முதல்வர் அவர்கள் இது தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி சமூக நீதி காத்திட வேண்டுமென்றும், தவறும் பட்சத்தில் சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரும் அணிதிரண்டு இந்த சட்டவிரோத, சமூக விரோத போக்கைக் களைய களம் காண வேண்டும் என்று கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil