Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடிட்டர் ரமேஷ் நண்பர் திடீர் மரணம்

Webdunia
திங்கள், 22 ஜூலை 2013 (08:36 IST)
FILE
சேலத்தையடுத்த ஓமலூர் எம்.செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகமணி(வயது 52). இவர் பாரதீய ஜனதா கட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

முருகமணி ஆடிட்டர் ரமேசின் நெருங்கிய நண்பர் ஆவார். ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் முருகமணி சேலம் விரைந்து வந்தார்.

சேலம் வந்த அவர் ஆடிட்டர் ரமேசின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் அவர் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டார். அப்போதும் முருகமணி அழுதப்படியே இருந்தார். இவரை பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் தேற்றினர்.

இந்த நிலையில், சோகத்துடனே காணப்பட்ட அவருக்கு நேற்று முன்தினம் இரவு வீட்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் முருகமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஓமலூர் எம்.செட்டிப்பட்டிக்கு சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments