Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகார் : தமிழக வன அதிகாரி‌க்கு எ‌‌திரான மனு ‌நிராக‌ரி‌ப்பு

Webdunia
வியாழன், 4 ஜூன் 2009 (13:12 IST)
தமிழக தலைமை வனப் பாதுகாவலர் எஸ்.பரூவாக்கு எதிராக, த‌‌மிழக அரசு தொடர்ந்த அப்பீல் மனுவை ‌நிராக‌ரி‌த்து சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பளித ்து‌ள்ளது.

முன்னாள் வனப்பாதுகாவலரும் (சமூக காடுகள் பாதுகாப்பு), தற்போது சென்னை தலைமை வனப்பாதுகாவலருமான (வன செயல்திட்டம்) எஸ்.பரூவா மீது 3 குற்றச்ச ா‌ற்ற ுகள் கூறப்பட்டன. அவர் வனப் பாதுகாவலராக பணியாற்றிய காலத்தில் பல்வேறு பணிகளுக்காக சில கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்துள்ளார்.

அந்தப் பொருட்கள் தரம் குறைந்ததாக இருந்தது என்றும், அந்தப் பொருட்களைக் கொண்டே பணிகள் நடைபெற்றன என்றும், அந்தப் பொருட்களுக்கான பணம் கொடுக்கப்பட்டதில் அரசுக்கு பண இழப்பு ஏற்பட்டது என்றும் குற்றம்ச ா‌ற் றப்பட்டது.

இதுதொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது. இதில், பரூவா மீதான குற்றச்ச ா‌ற்ற ுகளில் ஒருபகுதி மட்டும் நிரூபிக்கப்பட்டது. பதவி உயர்வுக்கான பட்டியலில் பரூவாவின் பெயர் இடம்பெறவில்லை.

பின்னர் மற்றொரு வழக்கில் அளித்த தீர்ப்பின்படி, அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், அடுத்தகட்ட பதவி உயர்வு பட்டியலில் பரூவாவின் பெயர் இல்லை. இதை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பரூவாவின் பதவி உயர்வு குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதன்பிறகு கூடுதல் முதன்மை வனப் பாதுகாவலராக பரூவா பதவி உயர்வு பெற்றார்.

பின்னர், தன்மீது ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் தீர்ப்பாயத்தில் பரூவா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக வனத்துறை செயலரும், முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, டி.அரிபரந்தாமன் ஆகியோர் விசாரித்து தீர்ப்பளித்தனர். அவ‌ர் அ‌ளி‌த்த ‌தீ‌‌ர்‌ப்‌பி‌ல், வனத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கு வனப்பாதுகாவலர் பரூவாவே காரணம் என்று வனத்துறை முடிவுக்கு வந்துள்ளது. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அறிக்கை அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டு உள்ளது. ஆனால், இந்த அறிக்கை பரூவாவிற்கு தரப்படவில்லை.

முதலமைச்சர் அலுவலக குறிப்பு அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி செயல்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை அவர் தீவிரமாக பரிசீலிக்கவில்லை. அவரது முடிவு தன்னிச்சையானது. எனவே மத்திய நிர்வாக தீர்ப்பாயம், பரூவா மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்தது சரிதான். அரசு அப்பீல் மனு ‌ நிராக‌ரி‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்று நீதிபதிகள் தீர்ப ்ப‌ளி‌த்தன‌ர்.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments