Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவிற்கு ஆதரவு: நாம் தமிழர் நிர்வாகிகள் விலகல்

Ilavarasan
செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (15:34 IST)
சீமான் அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டுக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகினார்கள். 
 
இதுதொடர்பாக பட்டுக்கோட்டை அரசு பிளாசாவில் நாம் தமிழர் கட்சியின் அவசரக்கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பாப்பாநாடு காமராஜ் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் பழ சக்திவேல் வரவேற்றார்.
 
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் தேவராஜ், மாவட்ட துணைத்தலைவர் ஜெகநாதன் மற்றும் மதுக்கூர் பழ.மணிகண்டன், பிரபாகரன், பேராவூரணி கொன்றை சண்முகம், சேதுபாவாசத்தரம் நீலகண்டன், குமார், பட்டுக்கோட்டை சண்முகம், அருள், அணைக்காடு கிளைமெண்ட், மாணவர் பாசறை மருத. உதயக்குமார் மற்றும் ஒன்றிய, நகர பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
 
கூட்டத்தில் திராவிட கட்சிகளை அழித்துவிட்டு 2016ம் ஆண்டு தமிழனை ஆட்சியில் அமர வைப்போம் என கூறிவிட்டு தற்போது திராவிட கட்சிக்கு வாக்குகள் கேட்பது கேலிக்குறியதாவும், மற்றவர் நகைத்து பேசும் வகையிலும் இருக்கிறது. 
 
ஓரே தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாற்பது நிலைபாடுகள் என்பது தமிழக மக்களையும், இவரை மதித்து இவர் பின்னால் வந்த இளைஞர்களையும் ஏமாற்றுவது போல் உள்ளது எனவே இந்த நிலைபாடுகளில் எங்களுக்கு இணக்கம் இல்லாததால் தஞ்சை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் விலகி கொள்கின்றோம், மாவட்ட கட்சியும் கலைக்கப்படுகிறது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டதாக அதன் மாவட்ட செயலாளர் பழ சக்திவேல் கூறினார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments