Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலை மீது வழக்கு

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2013 (11:45 IST)
FILE
அண்ணா பல்கலைக்கழகம் மீது தயா பொறியியல் கல்லூரி நிர்வாகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

மு.க. அழகிரி அறக்கட்டளைக்குச் சொந்தமான தயா பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து அண்ணா பல்கலைக் கழகம் மேல்முறையீடு செய்ததன்பேரில், தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், கல்லூரியின் அடிப்படை வசதிகள், கற்பிக்கும் வசதி, ஆசிரியர், பணியாளர்கள் நியமனம் ஆகியவற்றை ஆய்வு செய்து 10 நாளில் முடிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தயா கல்லூரி நிர்வாகம் சார்பில் அலுவலக மேலாளர் ஜெயகரன் க்ரூப் வியாழக்கிழமை தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு:

2011,2012 ஆம் ஆண்டு தயா பொறியியல் கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. கல்லூரிக்கு இணைப்பு வழங்குமாறு அளித்த விண்ணப்பத்தை அணணா பல்கலைக்கழகம் நிராகரித்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளது.

கல்லூரியின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்பித்தல் வசதிகளை ஆய்வு செய்து 10 நாள்களில் புதிதாக உத்தரவு பிறப்பிக்குமாறு நீத ி óமன்றம் கடந்த ஜூலை 3 ல் உத்தரவிட்டது.

ஜூலை 11 ஆம் தேதி பல்கலைக்கழகப் பதிவாளர் அனுப்பிய கடிதத்தில் பல்கலைக்கழக இணைப்பு பெறுவதற்கு கல்லூரிக்கு முழு தகுதியும் உள்ளதா? என்பது குறித்து குழுவினர் ஆய்வு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது நீதிமன்ற உத்தரவை மீறிய நடவடிக்கையாகும்.

2012,2013 ஆம் ஆண்டு மற்றும் 2013,2014 ஆம் ஆண்டுகளில் பலகலைக்கழக இணைப்பு பெற வேண்டி விண்ணபித்தபோது அதிகாரிகளின் சான்றுகள் அடிப்படையில் விண்ணப்பத்தை பல்கலைக்கழகம் நிராகரித்துள்ளது. இதுபோன்ற நடைமுறை மற்ற கல்லூரிகளில் பின்பற்றப்படவில்லை.

எனவே அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments