Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிற‌ப்பு‌ப் பொருளாதார ம‌ண்டல‌ங்களு‌க்கு ‌நில‌ம் ஒது‌க்‌கிய‌தி‌ல் முறைகேடி‌ல்லை: கருணா‌நி‌தி!

Webdunia
வியாழன், 1 மே 2008 (15:44 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் ‌ சிற‌ப்பு‌ப ் பொருளாதா ர ம‌‌ண்டல‌ங்களு‌க்க ு ‌ நில‌ம ் ஒது‌க்கு‌ம ் நடவடி‌க்கைக‌ளி‌ல ் முறைகேட ு எதுவு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி ‌ விள‌க்கம‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

செ‌ன்ன ை மாநகரா‌ட்‌சி‌ப ் பகு‌தி‌க்கு‌ள ் இர‌ண்ட ு ‌ சிற‌ப்பு‌ப ் பொருளாதா ர ம‌ண்டல‌ங்களு‌க்க ு ‌ நில‌ம ் ஒது‌க்க‌ப்ப‌ட் ட ‌ விவகார‌‌த்‌தி‌ல ், ‌ ரிய‌ல ் எ‌ஸ்டே‌ட ் தொ‌ழிலு‌க்க ு த‌மிழ க அரச ு துண ை போவதா க ப ா.ம.க. ‌ நிறுவன‌‌ர ் ராமதா‌ஸ ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இத‌ற்க ு ப‌தில‌ளி‌த்த ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பதாவத ு:

இந்த அரசைப் பொறுத்தவரையில் எதிலுமே ஒளிவு மறைவற்ற இணக்கமான அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதே தவிர எதிலும் மறைமுக நடவடிக்கை கிடையாது.

டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் ஏதோ 300 ஏக்கர், 400 ஏக்கர் பரப்பளவில் அமைவதல்ல.

சென்னையில் தகவல் தொழில்நுட்ப மையமான ராஜீவ் காந்தி சாலை தரமணியில் 25 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ கூ‌ட்டு‌த்துறை‌யிலே டாட்டா ரியாலிட்டி மற்றும் இன்ப்ராட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தோடு இணைந்து 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மற்றொரு நிறுவனமான டி.எல்.எப்., ஏறத்தாழ 27 ஏக்கர் நிலப்பரப்பில்தான் - தகவல் தொழில் நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதுவும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோவுடன் கூட்டுத்துறையிலே செயல்படவுள்ளது.

இந்த இரண்டு இடங்களுமே விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலமல்ல. எந்தவிதமான தனிப்பட்ட ஏழ ை எளியவர்களுக்கும் சொந்தமாக இருந்து அவர்களை காலி செய்து விட்டு கொடுக்கப்படுவதல்ல.

இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வரவுள்ளன.

நிறுவனங்களிலே பணியாற்றக் கூடியவர்களுக்கும், வெளியிலிருந்து வரக்கூடியவர்களுக்கும் பயன்பட வேண்டுமென்பதற்காக ஒரு சில லட்சம் சதுர அடி பரப்பளவில் மாநாட்டு மையமும், தங்கும் விடுதியும், அடுக்குமாடி குடியிருப்புகளும் அமையும். அந்த ஒரு சில லட்சம் சதுர அடி போக மற்ற இடங்களில் தொழிற்சாலைகள்தான் அமையும்.

இதுபோலவே மற்றொரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் முதலீடு 1,500 கோடி ரூபாய். 40 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அந்த மண்டலம் அமையும்போது பல மென்பொருள் நிறுவனங்கள் அங்கே உருவாகும். அ‌ப்போது, நிச்சயமாக 55 ஆ‌யிர‌ம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

55 ஆயிரம் பேர் என்ற அளவிற்கு இல்லாமல், ஐந்தாயிரம் பேருக்கு வேலை கிடைத்தால் கூட அது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நல்லதுதானே!

ஒ‌ளிவு மறைவ‌ற்ற டெ‌ண்ட‌ர் முறை!

தி.மு.கழக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒரு சில வாரங்களுக்குள்ளாக முடிவு செய்யப்பட்டு அவசர அவசரமாகப் போடப்படுவதில்லை.

கடந்த இரண்டாண்டு காலமாக அறிவிப்புகள் செய்து பல கட்டங்களில் தொடர்ந்து பேச்சு நடத்தி, ஒவ்வொன்றுக்கும் வெளிப்படையான, ஒளிவு மறைவற்ற டெண்டர் முறைகளைப் பின்பற்றி அதன்பிறகுதான் இறுதி செய்யப்படுகிறது. இந்த இரண்டு மண்டலங்களும் கூட அந்த முறையிலேதான் அளிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சிறப்புப் பொருளாதார மண்டத்திற்கான டெண்டர் விளம்பரம் 5-3-2007 அன்று பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு - 14-5-2007 டெண்டர் பெறுவதற்கான இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டு - மொத்தம் எட்டு நிறுவனங்கள் டெண்டர் கோரி - அதிலே முழுத்தகுதியும் பெற்று அரசுக்குச் சொந்தமான நிலத்திற்கு அதிக விலை கொடுக்க முன்வந்த டி.எல்.எப். நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

அதைப் போலவே 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான டெண்டர் விளம்பரம் 14-5-2007 அன்று பத்திரிகைகளிலே வெளியிடப்பட்டு - 6-7-2007 டெண்டர் பெறுவதற்கான இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டு -மொத்தம் ஏழு நிறுவனங்கள் டெண்டர் தகுதி பெற்று -இறுதியாக டாட்டா ரியலிட்டி நிறுவனம் மட்டுமே அதிக விலை கொடுக்க முன்வந்ததால் அந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

தமிழகத்திலே உள்ள சாமானியர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் உண்மையாக உதவி செய்யத்தான் வெளிநாட்டு, வெளிமாநில முதலீடுகளைக் கொண்டு வந்து தமிழகத்திலே தொழில் வளத்தை ஏற்படுத்திட இந்த அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறதே தவிர, டாட்டாக்களிடமும், கிஷோர்களிடமும் தனிப்பட்ட முறையிலே எந்தவிதமான ஆதாயமும் பெற வேண்டுமென்ற நோக்கத்திற்காக அல்ல.

வெளியிலிருந்து யாருமே இங்கே வரக் கூடாது, தமிழகத்திற்குள் இருப்பவர்கள்தான் தொழிற்சாலையைத் தொடங்கி அவர்களை மட்டும் ஊக்குவிக்க வேண்டுமென்றால், இவ்வளவு ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யக் கூடிய அளவிற்கு அத்தனை தொழிலதிபர்கள் தமிழகத்திலே கிடையாது.

மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டுமென்ற அரசின் தொழிற்கொள்கைக்கு விரோதமாக செயல்படுவதாகவும் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

சென்னையைச் சுற்றி மாத்திரமல்ல, கோவையிலும், மதுரையிலும், திருச்சியிலும், சேலத்திலும், திருநெல்வேலியிலும், ஓசூரிலும், வேலூரிலும் மென்பொருள் பூங்காக்களையும் பெரிய தொழிற்சாலைகளையும் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கே அடிக்கல் நாட்டு விழாக்களும் நடைபெற்று, அந்தச் செய்திகள் ஏடுகளில் வந்ததை டாக்டர் ராமதாஸ் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.

வள‌ர்‌ச்‌சியை‌த் ‌திசை ‌திரு‌ப்ப‌க் கூடாத ு!

இந்த அரசின் முயற்சிகளுக்கு எப்படியெல்லாம் தடைக்கற்கள் போடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டு சிலர் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அரசின் நல்ல முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டிய டாக்டர் அவர்கள் இப்படிப்பட்ட கேள்விகளை அறிக்கைகளாக்கி திசை திருப்புவது என்பது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை விசை ஒடிந்திடும் நிலைமைக்குத் தான் உள்ளாக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முத‌ல்வர் கருணாநிதி கூறி உள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments