Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விசாரணை கமிஷன்: கிருஷ்ணசாமி வற்புறுத்தல்!

விசாரணை கமிஷன்: கிருஷ்ணசாமி வற்புறுத்தல்!
, செவ்வாய், 4 நவம்பர் 2008 (16:26 IST)
அரசியல் கட்சி தலைவர்கள் பாதுகாப்பு குறித்து ஆராய அனைத்து‌க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் எ‌ன்று‌ கே‌ட்டு‌க் கொ‌‌ண்டு‌ள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் மரு‌த்துவ‌ர் ‌கிருஷ்ணசாமி, என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் அதன் பின்னணி என்பது பற்றி கண்டறிய அமர்வு நீதிபதியை கொண்டு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எ‌‌ன்று வ‌ற்புறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
சென்னையில் இ‌ன்று செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், மதுரை மாவட்டம் உத்தமபுரத்துக்கு செல்வது குறித்து முதலமைச்சரிடம் கடிதம் கொடுத்து இருந்தேன் எ‌ன்று‌ம் ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை எ‌ன்று‌ம் கு‌‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

2 வருடமாக எனது பாதுகாப்பை குறைத்து விட்டார்கள் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ‌‌கிரு‌ஷ்ணச‌ா‌மி, எனக்கு ஒரே ஒரு காவலரை மட்டும் பாதுகாப்பாக அனுப்பி வைத்ததில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறேன் எ‌ன்று‌ம் இந்த சம்பவத்துக்கு காவ‌ல்துறை மெத்தன போக்கே காரணம் எ‌ன்று‌ம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

அமைதியான முறையில் போரா‌ட்‌ட‌ம் நட‌த்‌‌தி கைது செ‌ய்‌ய‌ப்ப‌ட்ட தாழ்த்தப்பட்டவ‌ர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எ‌ன்று கே‌‌ட்டு‌க் கொ‌ண்ட ‌கிரு‌ஷ்ணசா‌மி, கோட்டப்பட்டியில் இன்று காவ‌ல்துறை‌யின‌ர் நட‌த்‌திய துப்பாக்கி சூ‌ட்டை க‌ண்டி‌த்து‌ள்ளா‌ர்.

காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுகிறது எ‌ன்று கூ‌றிய ‌கிரு‌‌ஷ்ணசா‌மி, அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகும். மதுரை மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் எ‌ன்று வ‌‌ற்புறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil