பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு கடுமையாக பாடுபட்ட மு.க.ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் கருணாநிதி, அவர் உங்கள் மூலமாக இதை கேட்க சொல்லி இருப்பார் என்று கருதவில்லை. கேட்கும் போது பார்ப்போம் என்றார்.
வருகிற 3ஆம் தேதி உங்கள் பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவீர்கள். அப்போது மு.க.ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா நடைபெறுமா? என்ற மற்றொரு கேள்விக்கு, முடிசூட்டு விழா எங்கும் நடப்பது இல்லை என்றார் கருணாநிதி.