Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.எஸ்சி. நர்சிங் சேர்க்கை கல‌ந்தா‌ய்வு ரத்து

எம்.எஸ்சி. நர்சிங் சேர்க்கை கல‌ந்தா‌ய்வு ரத்து
சென்னை , செவ்வாய், 23 ஜூன் 2009 (10:10 IST)
சென்னமருத்துவககல்வி இயக்குநரஅலுவலகமநடத்திஎம்.எஸ்‌சி (நர்சிங்) படிப்பகல‌ந்தா‌ய்வு முழுமையாரத்தசெய்யப்பட்டது.

எம்.எஸ்சி. நர்சிங் படிப்பில் சேருவதற்கான கல‌ந்தா‌ய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் நே‌ற்று நடைபெற்றது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 22 இடங்களுக்கும், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 120 இடங்களுக்கும் மாணவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

பி.எஸ்சி நர்சிங் முடித்து அதை பதிவு செய்து ஒரு வருடம் ஆகி இருக்கவேண்டும் என்ற விதிமுறைப்படி நடத்தப்பட்டது. ஆனால் பதிவு செய்வதை கருத்தில் கொள்ளாமல் படித்து முடித்து ஒரு வருடம் ஆனவர்களுக்கும் கல‌ந்தா‌ய்வு நடத்தவேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

கல‌ந்தா‌ய்வை நம்பி வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஏராளமானவர்கள் எங்களை கல‌ந்தா‌ய்‌வில் அனுமதிக்கவேண்டும் என்று கோ‌ரி‌க்கை வை‌த்தன‌ர். இந்த போராட்டம் அரசு உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று நடத்தப்பட்ட கல‌ந்தா‌ய்வு ரத்து செய்யப்பட்டது.

எம்.எஸ்‌சி (நர்சிங்) படிப்புக்கமீண்டுமஜூலை 3-வதவாரத்துக்குபபிறககல‌ந்தா‌ய்வு நடைபெறுமஎன்றமருத்துவககல்வி தேர்வுககுழுசசெயலரடாக்டரஷீலகிரேஸஜீவமணி தெரிவித்தார்.

இந்திநர்சிஙகல‌ந்தா‌ய்வு தற்காலிகபபதிவஇருந்தாலே, எம்.எஸ்‌சி (நர்சிங்) படிப்பிலமாணவிகளைசசேர்ப்பதிலதவறில்லை. தகவலதொடர்பிலஏற்பட்இடைவெளி காரணமாகவகல‌ந்தா‌ய்‌வி‌ல் பிரசசனஏற்பட்டது. எனவமீண்டுமகல‌ந்தா‌ய்வு நடைபெறும்போதபிரசசனஏற்படாது என்று தமிழ்நாடடாக்டரஎம்.ி.ஆர். மருத்துபல்கலைக்கழதுணைவேந்தரடாக்டரமீரமுஸ்தபஉசேன் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil