Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவங்க பட்டையை பயன்படுத்தி நோய்களுக்கான தீர்வு...!!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (23:30 IST)
ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் தேன் மற்றும் இலவங்கப் பட்டைப் பொடியைப் போட்டு காலை உணவிற்கு முன்னும், இரவு தூங்கப் போவதற்கு முன்னும் குடிக்கவும். இந்தக் கலவையைக் குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படி கொழுப்பு கரைவதுடன், மேலும் கொழுப்பு சேராமலும் இருக்கும். மிகவும் பருமனான உடல் இருப்பவர்கள் கூட தங்கள் எடையை குறைக்கலாம்.
 
 
3 மேசைக் கரண்டி தேனுடன் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை குழைத்து பேஸ்ட் செய்யவும். இதப் பேஸ்ட்டை முகப் பருக்களின் மேல் நேரடியாக இரவு  படுக்கப் போகுமுன் பூசவும். காலையில் எழுந்திருந்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தை அலம்பவும். தினசரி தொடர்ந்து செய்து வர முகப் பருக்கள் அடியோடு  மறையும்.
 
 
ஒரு ஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியை மூன்று கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். அதனுடன் நான்கு டீஸ்பூன் தேன் சேர்த்து டீ செய்யவும். கால் கப் வீதம் மூன்று அல்லது நான்கு முறை குடிக்கவும். சருமத்தை இளமையாகவும் மென்மையாகவும் வைப்பதுடன், வயதாவதையும் தடுக்கிறது.
 
இரண்டு மேசைக் கரண்டி தேனை எடுத்து அதன் மேல் சிறிது இலவங்கப் பட்டைப் பொடியைத் தூவி சாப்பாட்டுக்கு முன்னால் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறும்,  அசிடிடியும் குறையும். ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவினை சாப்பிட்டவுடன் இந்தப் பொடியை தேனுடன் சாப்பிடுவது ஜீரணத்தை தூண்டி கடினமான உணவை  ஜீரணிக்க உதவும்.
 
தினசரி தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சாப்பிடுவது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் நம் உடலை வைரஸ் தாக்குதலில் இருந்தும் காக்கும்.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments