முற்பிறவி மருத்துவ சிகிச்சை ( Past Life Therapy) என்ற தலைப்பில் உளவியல் ஆராய்ச்சிகள் ரஷ்யாவிலும், ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
webdunia photo
FILE
ஹிப்னோதெரபி சிகிச்சை முறையில், மனவியாதிகள் மருந்தின்றி குணமாக்கப்படுகின்றன. இதனால் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் ( side effects) தவிர்க்கப்படுகின்றன.
முற்பிறவியில் நிறைவேறாத நம் ஆசைகள், விட்டுப் பிரிந்து போன காதல் உறவுகள் இப்பிறவியில் நிறைவேறுவதாக அமெரிக்க மனநல மருத்துவர் டாக்டர் பிரெய்ன் கூறுகிறார்.
நாம் முற்பிறவியில் பாதியில் விட்டுப்போன கடமைகளை அறிந்து செயலாற்றவும், இந்த சிகிச்சை உதவுகிறது.
முற்பிறவிகளில் கற்ற கலைகள், கல்வியறிவும் கூட இப்பிறவியில் நம் ஆழ்மனதில் பதிந்துள்ளன. அதை அறிந்து செயல்படுவதால்தான் சிறிய வயதில் கூட பலரால் பெரிய சாதனைகளை புரிய முடிகிறது. அதற்கு இந்த ஹிப்னாடிக் சிகிச்சை உதவுகிறது.
செல் நினைவுத் திறன் ( Cellular Memory):
நமது உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் ஆழ்மனதில் பதிந்துள்ள கடந்த கால நினைவுகள் நிறைந்துள்ளன. முந்தைய பிறவியில் நாம் அனுபவித்த இன்ப, துன்பங்கள், உடலில் ஏற்பட்ட வலிகள்-வேதனைகள் அனைத்துமே செல்களில் நிறைந்துள்ளன. அவற்றிற்கு ஏற்றபடிதான் நம் உடலும், உள்ளமும் இயங்குகிறது.
கடந்த கால நினைவலைகள் செல்களில் நீக்கமற நிறைந்திருப்பதால், நமது வாழ்வு பாதிக்க நேரிடுகிறது.
Past Life Theraphy - எனப்படும் மனநல மருத்துவ முறையில் இந்த மனபாதிப்புகளை கண்டறிந்து நீக்கி விட்டால், மனதும் உடலும் எந்த மருந்தும் இல்லாமல் பக்கவிளைவுகளின்றி நிரந்தர குணம் அடை ய ஏதுவாகிறத ு.
மனம் அமைதியாகவும், தெளிவாகவும் இருந்தால், எத்தனையோ உண்மைகள் புரிகின்றன. ஆனால ் மனக்குழப்பத்தின் போது ஆறாவது அறிவு செயல்படுவதில்லை. ஆழ்மனதுடன் தொடர்புடைய பிரச்சினை என்பதால், எந்த மருந்தும் குணப்படுத்துவதில்லை.
ஆழ்மனதை ஊடுருவிப் பார்த்து மன பாதிப்புக்கான காரணத்தை அறிந்து, அதற்குரிய சிகிச்சையை அளித்தால், எந்தவித நாட்பட்ட மன வியாதியும் குணமாகி விடுகிறது. இந்த அரிய சிகிச்சை முறைதான் ஹிப்னோதெரபி.
முற்பிறவி பயங்களை குணப்படுத்தும் முறைக்கு Past Life Therapy என்று பெயர்.
ஒரு மனிதன் இறந்து விட்டாலும், அவனது ஆத்மா மறுபிறவி எடுக்கிறது. அந்த ஆத்மாவில் அல்லது மனதில் பதிந்துள்ள நினைவுகளும், உணர்வுகளும் அழிந்து விடுவதில்லை. தொடர்ந்து அடுத்த பிறவியிலும் ஆழ்மனதில் வியாபித்து இருப்பது பல ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
உதாரணமாக முற்பிறவியில் நெருப்பில் எரிந்து உயிரிழந்தவருக்கு, இந்த பிறவியில் விளக்கின் தீ கூட பயத்தை ஏற்படுத்தலாம்.
சிலர் தண்ணீரைக் கண்டு அஞ்சுவர். வேறு சிலர் தனியாக இருப்பதற்குப் பயப்படுவார்கள். இதுபோன்ற மனோவியாதிகளுக்கு ஹிப்னோதெரபி முறை அவசியமாகிறது.
எனவே ஆழ்மன ரணங்கள் ( Subconcious wounds) நிச்சயம் அகற்றப்பட வேண்டும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு உதாரணமாக பல நிகழ்வுகளைச் சொல்ல முடியும்.
மீனாட்சி என்ற இளம் பெண் முந்தைய பிறவியில் சாலை விபத்தில் இறந்து போனதாகவும், அந்த நினைவுகளால் தான் மன நோயாளியாக 15 ஆண்டுகள் வரை இருந்ததாகவும் தெரிய வந்தது. ஹிப்னாடிச முறைப்படி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் குணம் அடைந்துள்ளார்.
ஹிப்னாடிச சிகிச்சை மட்டுமல்லாது Par a Psychotherapy எனும் மனோசக்தி மருத்துவமும் பேருதவியாக உள்ளது. இந்த சிகிச்சை மூலம் முற்பிறவி மனோவியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது.
முற்பிறவி மருத்துவம் குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர்,
www.prebirth.com www.healyourpastlives.com www.pastlifetherapy.com www.pastliferegression.com www.pastlifephobias.co m போன்ற இணையதளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.
வேண்டாத அருவருப்பான நினைவுகள் தொடர்ந்து வந்து வாட்டுதல் ( Obsession).
எப்போதும் தற்கொலை முயற்சி.
கடவுள் அல்லது தேவதை தன்னுடன் மட்டும் பேசுவதாகக் கூறுதல்.
குணப்படுத்த முடியாத மன / உடல் நோய்கள்.
சுயநினைவு/மனக்கட்டுப்பாட்டை இழந்து எங்கோ கற்பனையில் எப்போதும் சஞ்சரித்தல்.
கணவன்/மனைவி மேல் காரணமற்ற வெறுப்பு - வீட்டை விட்டு ஓடிப் போகுதல்.
மருந்தால் தீர்க்க முடியாத மனக்கோளாறுகள்.
நாம் காலங்காலமாக சுமந்து வரும் கடந்த கால எதிர்மறையான எண்ணங்களை ( Past Life Negative Baggages) ஆழ்மனதில் இருந்து நீக்கி விட்டால், இன்றைய வாழ்வில் அமைதியையும், முன்னேற்றத்தையும் காண முடியும் என்பதில் ஐயமில்லை.
தவிர இப்பிறவியில் நாம் செய்யும் நன்மைகள் கடந்த பிறவிகளின் பாவச் சுமைகளை குறைக்கின்றன. இங்கே ஆன்மிகமும், அறிவியலும் சங்கமமாகின்றன. எனவே அறிவியலும், ஆன்மிகமும் ஒன்று என்பது புலனாகிறது.
தொடர்புக்கு:
டாக்டர் வேதமாலிகா, மனோதத்துவ சிகிச்சை நிலையம் மாங்காடு, சென்னை. செல்பேசி: 9841780166 மின்னஞ்சல்: maduvanthii@yahoo.co m