Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனநோய்க்கு அடிப்படை என்ன?

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (14:19 IST)
மனோதத்துவம் ( Psycholog y) என்றால் என்ன என்பதை அடிப்படையில் புரிந்து கொள்தல் அவசியம்.

உதாரணமாக ஒரு சிலர் தினமும் இரவு நேரத்தில் மது அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு நாள் மது அருந்த தவறும் பட்சத்தில் அவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறத. தொடர்ந ்து குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு காலப்போக்கில் கைநடுக்கம் போன்ற நரம்பு தளர்ச்சி பாதிப்பு கள ் ஏற ்படத ் தொடங்குகிறது. இதுவே சிலருக்கு மனநோய்க்கும் அடிப்படையாக அமைகிறது.

பொதுவாக அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும், மனஅழுத்தமும் ஒன்றுக்கொன்று எவ்விதம் தொடர்புடையதோ, அதேபோல மனநோயும், தூக்கமின்மையும் நெருங்கிய கூட்டாளிகள் எனலாம்.

தூக்கமின்மை காரணமாக உடல் சூடு உட்பட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்பட்டாலும் கூட, அதிக நாட்கள் அல்லது ஒரு நாளில் அதிக நேரம் தூக்கமின்றி இருந்தால் அது மனநோய்க்கு வித்திடும் என்பது உறுதி.

பொதுவாக மனித உடலுக்கு தினமும் 8 மணி நேர தூக்கம் அவசியமாகிறது. அது அதிகரித்தாலோ அல்லது போதிய அளவு தூக்கமின்மையாலோ மூளை சோர்வு ஏற்படுகிறது. அதனால்தான் தூக்கமின்மைக்கும், மனோவியாதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதென உளவியல் கூறுகிறது.

பொதுவாக மனநோய் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகினால், முதலில் அவர்களுக்கு அளிக்கப்படுவது நிம்மதியான உறக்கத்தை கொடுக்கக்கூடிய மாத்திரை, மருந்துகளே.

மனநோய் துவக்க நிலையில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் நன்றாக - போதிய அளவு தூங்கினாலே அவர்களுக்கு 90 சதவீத குணம் ஏற்பட்டு விடும்.

மனநோய் என்பது பல்வேறு நிலைகளில், அதன் தீவிரத்தைப் பொருத்து வேறுபடுகிறது.

எந்தெந்த மாதிரியான தருணத்தில் மனநோயாளிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள், அவர்களின் தன்மைக்கேற்ப தீர்வு அல்லது எந்த மாதிரியான மனோதத்துவ நிபுணர்களை அணுகலாம் என்பது பற்றியெல்லாம் இப்பகுதியில் தொடருவோம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

Show comments