Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனநோயாளிகளை சிகிச்சைக்கு உட்படுத்துவது எப்படி?

Webdunia
மனநோய் பற்றிய தகவல்களையும், மனோதத்துவ நிபுணர்களை அணுகுவது குறித்தும் ஏற்கனவே பார்த்தோம்.

பொதுவாக ஏற்படக்கூடிய தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் போன்றதல்ல மனோவியாதி என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதுபோன்ற நோய் எனில், மாத்திரை, மருந்து அல்லது ஊசி மூலம் ஓரிரு நாளில் குணப்படுத்தி விடலாம்.

ஒருவருக்கு மனநோய் உள்ளதா? அது எந்த வகையைச் சேர்ந்தது? எதனால் ஏற்பட்டது? என்பதை குடும்பத்தில் இருப்பவர்கள் அறிந்து கொள்ளவே சிறிது காலம் பிடிக்கும்.

எனவே மனநோய்தான் என்பதை உறுதி செய்தபின் சம்பந்தப்பட்டவரை அலட்சியப்படுத்தாமல், அவருடன் தொடர்புடையவர்கள் பரிவுடன் நடத்த பழகிக்கொள்ள வேண்டும்.

மனநோய் ஏற்பட்ட நபர் கணவனோ, மனைவியோ அல்லது குழந்தைகளோ - அது ஆணோ அல்லது பெண்ணோ - யாராக இருப்பினும் அவர்களுக்கு உரிய சிகிச்சையை அளிக்கும் முன், அவர்களிடம் அன்பு செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதிரில் இருப்பவர்கள் மீது வன்முறையைக் கூட ஏவ நேரிடும். அதாவது, கையில் கிடைத்ததைக் கொண்டு தூக்கி வீசுவார்கள். கண்ணில் பட்டவர்களை அடிக்கக்கூடும். கண்ணாடி போன்ற பொருட்களை உடைக்க நேரிடலாம். எந்த மாதிரியான நிகழ்வானாலும், அவர்களின் நோயின் தீவிரம் கருதி, அவர்கள் மீது கோபப்படாமல் நிதானத்தைக் கடைபிடித்தல் அவசியம்.

மனநோயாளிகளைக் காட்டிலும், அவர்களை எதிர்கொள்பவர்களின் செயல்பாடு மிகவும் முக்கியமானதாகும், உடனிருப்பவர்களின் செயல்களாலேயே அவர்களுக்கு பாதி குணம் ஏற்பட வாய்ப்புண்டு.

பலர் மருத்துவமனைக்கே வர மறுப்பார்கள். வேறு சிலர் மருத்துவமனைக்கு வந்த பின் தனக்கு எந்த நோயும் இல்லை என்பார்கள். எனவே அதுபோன்ற தருணத்தில் அவர்களை சிகிச்சைக்குட்படுத்த வேண்டியது உடனிருப்பவர்களின் கடமை. கூடியவரை நோயாளிகளின் நிலையறிந்து, அவர்கள் வழியிலேயே எடுத்துக் கூறி மருத்துவர்களிடம் அழைத்து வர வேண்டும்.

ஒருசில பெண்களுக்கு மகப்பேறின் போது (குழந்தை பிறந்தவுடன்) மனநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அப்படிப்பட்ட பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட மறந்து, தங்கள் குழந்தை என்பதையே மறந்துவிட்டு தனிமையில் அமர்ந்து ஏதோ யோசனையில் இருப்பார்கள். அவர்களை கண்காணித்து உரிய நேரத்தில், பாலூட்ட வைத்து, மாத்திரை, மருந்துகளை சாப்பிடச் செய்து குணப்படுத்த வேண்டியது அவர்களின் தாய் அல்லது உடனிருப்பவர்களின் கடமை எனலாம்.

பொதுவாக மகப்பேறின் போது ஏற்படும் மனநோய், எளிதில் குணப்படுத்தக்கூடியதே என்றும், அதனைக் கண்டுபிடிக்காமல் விடும்போதுதான் பெரிய அளவில் பாதிப்பாக அமையக்கூடும் என்றும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மனநோய் மற்றும் அவை தொடர்பான மேலும் விவரஙக்ளை அடுத்தடுத்து வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

Show comments