Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதன்கிழமை காதல்...வியாழக்கிழமை செக்ஸ்!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2011 (19:57 IST)
காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடும் இன்றைய எந்திர வாழ்க்கையில் எந்தெந்த விடயங்களை எந்தெந்த கிழமைகளில் செய்தால் சாதகமாக இருக்கும் என்பது குறித்த ஒரு ஆராய்ச்சியை "லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்" மேற்கொண்டுள்ளது.அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள விடயம் இதோ:

திங்கள்:
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது:

வார விடுமுறை முடிந்து வேலை நாட்கள் தொடங்கும் திங்கட்கிழமை,ஏறக்குறைய உலகம் முழுவதுமே டென்ஷனான தினமாகவே உள்ளது.அலுவலகம் செல்வோர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வோர்கள் என வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினருக்குமே திங்கட்கிழமை என்பது ஒரு படபடப்பு மிகுந்த நாள்தான்.அப்படியெனில் அன்றைய தினம் பி.பி.( ரத்த அழுத்தம்) எகிறும் என்பதை சொல்லவேண்டியதே இல்லை.எனவேதான் திங்கட்கிழமையை தங்களுக்கு பிடித்த வகையில் மன அமைதியை ஏற்படுத்திக்கொள்ளும் தினமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பது ஆய்வாளர்களின் அட்வைஸ்.

செவ்வாய்க்கிழமை:
செய்யவேண்டியவற்றை பட்டியலிடலாம்:
செவ்வாய்க்கிழமையன்று ஏறக்குறைய நாம் வழக்கமான வேலை "மூடு" க்கு திரும்பியிருப்போம்.எனவே அன்றைய தினம்,வீட்டு விடயம் ஆனாலும் சரி; அலுவலக விடயம் ஆனாலும் சரி, செய்து முடிக்கவேண்டிய அல்லது செய்ய நினைக்கும் காரியங்களுக்கான திட்டமிடலை செய்துகொள்ளலாம்.வாரத்தின் தொடக்கத்தில் இருப்பதால் அன்றைய தினம் நமது மூளையின் இடதுபக்க இயக்க செயல்பாடு ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்றும்,எனவே வழக்கமான பணிகளை செய்வதற்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள் என்று கூறுகிறது "தொழிலக மற்றும் நிறுவனங்களுக்கான மனோதத்துவ" ஆராய்ச்சி ஒன்று!

புதன்:
காதல் செய்ய சிறந்த தினம்:

காதலை சொல்ல, முதல் டேட்டிங்கிற்கு சம்மதம் பெற, காதலர்கள் சந்தித்துக்கொள்ள புதன்கிழமை மகா உசிதமான கிழமை என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள்.இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சுமார் 8,000 பேர்களில் 40 க்கும் அதிகமான விழுக்காட்டினர் காதல் செய்ய புதன்கிழமைக்கே ஜே...! போட்டுள்ளனர்.

மேலும் வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை தங்களது காதலன் அல்லது காதலியை சந்திக்கலாம் அல்லது டேட்டிங்-குறைந்தபட்சம் பீச் அல்லது சினிமாவுக்காவது போகலாம் என்பதை முடிவு செய்துகொள்ள இரண்டு,மூன்று நாட்கள் அவகாசம் இருப்பதால், அநாவசிய மனமுறிவு ஏற்படாது. ஒருவேளை காதலன் அல்லது காதலி யார் மறுப்பு தெரிவித்துவிட்டாலும், உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு செல்வது குறித்தாவது திட்டமிட்டுக்கொள்ள முடியும்.

சம்பள உயர்வும் கேட்கலாம்:

இவையெல்லாவற்றையும் விட அலுவலகத்தில் புரமோஷன் அல்லது சம்பள உயர்வு குறித்து மேலதிகாரியிடம் பேச புதன்கிழமைதான் "பெஸ்ட் சாய்ஸ்" என்று அடித்துக்கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.வாரத்தின் நடுப்பகுதி என்பதால்,மேலதிகாரிகள் அல்லது முதலாளிகள் டென்ஷன் குறைந்து காணப்படுவார்கள் என்பதால், நமது கோரிக்கைக்கு சாதகமாக பலன் கிடைக்கும் என்கிறது லண்டனில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளின் முடிவுகள்.

வியாழக்கிழமை:
செக்ஸ் வைக்கும ் தினம்:

செக்ஸ் வைத்துக்கொள்ள சிறந்த தினம் வியாழக்கிழமையைப்போன்று வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டவர்கள். வாரத்தின் நடுப்பகுதியை தாண்டிய தினம் என்பதால், அன்றைய தினம் பாலியல் இச்சைக்கான செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் "கார்டிஸால் எனர்ஜி" அளவு உச்சத்தில் இருக்குமாம்.எனவே அன்றைய தினம் அதிகாலையில் கலவியலில் ஈடுபடுவது ஆகச்சிறந்தது என்கிறார்கள்.

ஆண்களுக்கான (செக்ஸ் ஹார்மோன்) டெஸ்டோஸ்டெரோனும்,பெண்களுக்கான ஆஸ்ட்ரோஜ்னும் மற்ற நாட்களை விட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால், அன்றைய தினம் அதிகாலை அலாரம் வைத்துக்கூட எழுந்துகொள்ளலாம் என்று கூறி நமுட்டு சிரிப்பு ஒன்றை உதிர்க்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

வெள்ளிக்கிழமை:
புகைப்பதை கைவிட சிறந்த நாள்:

வார இறுதி என்பதாலும்,மறுதினம் வாரவிடுமுறை என்பதாலும் டென்சன், மன அழுத்தம் போன்றவை இருக்காது."வில் பவர்" எனப்படும் மன உறுதியும் அதிகம் இருக்கும் என்பதால் குறைந்தபட்சம் அன்றைய ஒரு தினத்திற்காவது புகைக்காமல் இருக்கலாம்.முடிந்தால் இனிமேல் புகைப்பதில்லை என்று மனதிற்குள் எடுத்துக்கொண்ட சத்தியத்தை அன்றைய தினம் நடைமுறைப்படுத்த தொடங்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதே சமயம வெள்ளிக்கிழமை நாம் வார விடுமுறை "மூடு"க்கு வந்துவிடுவோம் என்பதால், சிந்திக்கும் திறன் குறைந்துவிட வாய்ப்புள்ளது.எனவே முக்கிய முடிவுகளை அன்றைய தினம் எடுப்பதை தவிர்க்கலாம் என்றும் அவர்களது அட்வைஸ்!

சனிக்கிழமை:
குழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த தினம்

உங்களது குழந்தை எதிலும் சிறந்தவராக விளங்கவேண்டும் அல்லது வெற்றியாளராக திகழவேண்டும் என்றால் அந்த குழந்தை சனிக்கிழமையன்று பிறந்தால் நிச்சயம் நடக்கும் என்கிறது " Office for National Statistics" மேற்கொண்ட ஆய்வு. அவ்வளவு ஏன் சனிக்கிழமையன்று பிறந்தவர்கள் பிரதமராக ஆவதற்கு கூட வாய்ப்புள்ளதாம்.ஏனெனில் உலகில் 21 பிரதமர்கள் சனிக்கிழமைகளில் பிறந்தவர்கள்தான் என்றும், இதில் 1900 ஆம் ஆண்டுக்கு பின்னர் 6 பிரதமர்கள் சனிக்கிழமைகளில் பிறந்தவர்கள்தான் என்கிறது இந்த ஆய்வு.

ஞாயிறு:
வெளியில் சாப்பிட சிறந்த தினம்

வீட்டில் மனைவி சமையலை சாப்பிட்டு போரடித்துப்போனவர்கள் அல்லது குடும்பத்தினரோடு ஓட்டலில் சாப்பிட விரும்புபவர்கள் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த பழக்கத்தை தொடர ஏற்ற தினம்தான் ஞாயிறு என்கிறது ஆராய்ச்சி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?