Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவ வயதினரின் ஈர்ப்புகள்.. பேசலாமா பேசக்கூடாதா?

கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2012 (16:42 IST)
webdunia photo
WD
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை? இந்த பழமொழிதான் தான் நினைவுக்கு வருகிறது, சில பெற்றோர்களை பார்த்தால். தங்கள் மகன்/மகள் பத்திரமாக, எதிர்பாலினிரன் தாக்கம் இல்லாமல் பருவ வயதினை கடக்க வேண்டும், அதே சமயம் அவர்களிடம் காதலை பற்றியோ, பருவ வயதில் ஏற்படும் உடல், மன நிலை மாற்றங்களை பற்றியோ, காம உணர்ச்சியை பற்றியோ பேசி விட கூடாது.

எங்கள் பக்கத்துக்கு வீட்டில் நடந்து கொண்டு இருந்த காரசாரமான விவாதம் அது. அவர்கள் வீட்டு பையன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறான். அவனது பள்ளி சாதாரண பள்ளிகளை போல் இல்லாமல் படிப்பை போலவே வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளி. அன்று அவர்களுடைய வகுப்பாசிரியர் காம உணர்ச்சியை பற்றி சொல்லிக் கொடுததிருக்கின்றார். அது இயற்க்கை என்றும் அதை கெட்டது என்றும், அவ்வகை யோசனைகள் வருவதால் தன்னை கெட்டவன் என்றும் முத்திரை கொடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும், அதை வாழ்க்கையில் ஊறுகாய் போல நடத்த வேண்டுமே தவிர அதையே வாழ்க்கையின் அர்த்தமாக கொள்ளக் கூடாது" என்று விளக்கி உள்ளார்.

வேடிக்கை என்ன என்றால், நம்மால் எடுத்து சொல்ல முடியாத விஷயங்களை யாரேனும் என் குழந்தைக்கு கூச்சம் பார்க்காமல் எடுத்து சொல்லுகின்றார்களே, என்று சந்தோஷப்படாமல் அந்த பெற்றோர்கள் அந்த பையனையும், பள்ளியையும் போட்டு வறுத்து எடுத்து விட்டார்கள். ஒன்றும் தெரியாத எங்கள் பச்சை குழந்தைகளின் மனதை இவர்கள் எப்படி கலைக்கலாமா? இவர்கள் யார் அதை பற்றி பேசுவதற்கு? எங்களிடம் என் முன் அனுமதி பெற வில்லை என 1008 கேள்விகள்.

இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டு இருந்த எனக்கும் 1008 கேள்விகள்.

இந்திய பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் பாலுணர்ச்சியை பற்றி என்ன தன் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்? அதை பற்றி பேசாமலிருந்தால் தங்களுடைய பிள்ளை ரிஷ்ய ஸ்ரிங்கராகவோ அல்லது காந்தி மகாத்மாவாக வளருவார்கள் என்றா? அல்லது அதை பற்றிய ஞானம் ஏதேனும் ஒரு நாள் அவர்களின் உள்ளத்தில் ஒளியாக தோன்றும் என்றா அல்லது அவனுடைய நண்பர்கள் அனைவரும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வெறும் பாடத்தை மட்டுமே படித்து அதை பற்றி மட்டுமே சதா சர்வ காலமும் பேசிக் கொண்டு இருகின்றனர் என்றா?

webdunia photo
WD
நமது சமுதாயம் வெகு வேகமாக மாறி வரும் சமுதாயம். நினைக்கும் பொது சட்டென்று மனதில் தோன்றி மறையும் வார்த்தை "தறி கேட்டு ஓடும் வேகம்." இந்த வேகத்தில் தடம் புரளாமல் இருக்க வேண்டும் என்றால் அதை பழைமை வாதங்களை முன் வைக்கும் நூற்றாண்டுகள் பிந்தைய சிந்தனைகளாலும் முடியாது, அதே சமயத்தில் மனதில் தோன்றிய எண்ணங்களை எல்லாம் செயல் படுத்தும் இன்றைய முற்போக்கும் பலன் இல்லை. கத்தி மீது நடப்பது என்னை பொறுத்த வரை இதனினும் சுலபமே.

அப்போது என்ன தான் வழி? ஞானம், அதிலிருந்து பிறக்கும் விழிப்புணர்வு, இவை மட்டுமே வழிகள். ஞானமா? என்ன பேசுகின்றீர்கள் என்று கேட்கிறீர்களா? மூளையை பற்றிய ஞானம், இளமையில் முழுமையாக வளர்ச்சி அடையாத நிலையில், ஆபத்தை அல்வாவை போல் பாவிக்கும் தன்மையுடைய தங்களை பற்றிய கல்வியை, வாழ்க்கை கல்வியை இள வயதினருக்கு முழுமையாக புகட்டா விட்டால், பொன்னான சமயத்தை, சந்தர்ப்பங்களை சோடா நுரையை மாதிரி குப்பென்று பொங்கி அணையும் உணர்சிகளில் வீணடித்து இருப்பார்கள்.

என்னுடைய மாணவர் வாழ்க்கை கல்வி வகுப்புகளில் அதற்காவே அதாவது "பருவ கவர்ச்சி வகுப்பை இதற்காகவே ஒரு முக்கிய அங்கமாக வைத்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு அந்த வகுப்பை நடத்தும் பொது ஒவ்வொரு புதுமையான அனுபவம் என்றாலும் ஒரு சில விஷயங்கள் மாறுவதே இல்லை. "கேர்ள் பிரிஎண்ட்ஸ்" "பாய் பிரெண்ட்ஸ்" என நான் துவங்கும் போது நமட்டு முறுவல்களும் கிண்டல் சிரிப்புகளும் அடாவடி பேச்சுக்களுமாக இருக்கும் பிள்ளைகள், வகுப்பின் பாதியில் அந்த போக்கை விடுத்து கண்களில் கூர்மையுடன் கவனிக்க துவங்கும் நேரம் அலாதியானது. பின் திரும்பவும் மெதுவாக சிரிப்புகள் துவங்கும். வகுப்பின் முடிவில் பெரும்பாலும் சிரிப்பு சத்தம் அதிகமாகவே இருக்கும், ஆனால் இந்த சிரிப்பில் ஒரு வித்தியாசம், இம்முறை வரும் சிரிப்பு, தன்னையே பார்த்து சிரித்து கொள்ளும் சிரிப்பு.

தன்னைப் பற்றியும், நான் செய்யும் விஷங்களை ஏன் செய்கிறேன் என்ற புரிதல்கள் இல்லாமல் வாழ்க்கையை கழிப்பது பரிதாபம். நாம் தான் அப்படி வளர்ந்தோம் என்றால் நம் பிள்ளைகளுக்கும் அதே விதியை ஏற்படுத்தலாமா? பாலுணர்வை மாத்திரமே அல்ல, மொத்த வாழ்க்கையும் தான் சொல்லுகிறேன்.

ஆமாம், சொல்லிக் கொடுத்தால் மட்டும் என்ன தப்பே செய்யாமல் இருந்து விடப் போகிறார்களா என்று நொந்து கொள்ளுவோர்களுக்கு ஒரு வார்த்தை. இருக்கலாம், இல்லாமல் போகலாம், அனால் விழிப்புணர்ச்சியில் இருந்து வரும் வாழ்க்கையில், கிழே விழுந்தாலும் எழுந்திருப்பது சுலபம் அல்லவா? என்ன சொல்லுகீர்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?