Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மஞ்சளின் மகத்துவம்!

மஞ்சளின் மகத்துவம்!
, சனி, 12 ஜனவரி 2008 (10:51 IST)
webdunia photoWD
பொங்கல் பண்டிகையின் அடையாளமான பொங்கல் பொங்கும் பானையைச் சுற்றி மஞ்சள் செடியைக் கட்டியிருப்பார்கள். தமிழரின் வாழ்வுடன் மஞ்சள் அந்த அளவிற்கு பின்னிப் பிணைந்துள்ளதையே பொங்கல் பானையிலும் அது மாலையாய் சுற்றப்பட்டு பாரம்பரியத்தின பிரதிபலிப்பாக திகழ்கிறது.

மஞ்சள் என்ற ஒரு செடியின் கிழங்கு, நம்முடன் பின்னிப் பிணைந்து காலம் தொட்டு வாழ்ந்து வரும் ஒரு தெய்வீகப் பொருள். உணவு, மருந்து என்று பல கோணங்களில் நமக்கு உதவுகிறது.

நிறங்களில் புனித நிறமான மஞ்சள் நிறம் ஆன்மீகத்தைக் குறிக்கும், காவி பசுமையை குறிக்கும். பச்சை இரு வண்ணத்திலும் மங்களத்தை சேர்க்கும் மகிமை வாய்ந்தது. காவியில் மஞ்சளை நீக்கினால் சிவப்பு, அது வறுமையை காட்டிவிடும். பசுமையில் மஞ்சளை நீக்கினால் நீலம் மட்டும் மிஞ்சும். அது ஆபத்தை காட்டும்.

புனிதம் இல்லாமல் ஆன்மீகமும், செழுமையும் ஒரு காலம் வளராது. பழைய கால முறைப்படி சுண்ணாம்பு நீரில் பழுத்த மஞ்சள் கிழங்கினை ஊற வைத்து உலர்த்தி இடித்து குங்குமம் என்று நெற்றியில் இட்டுக் கொண்டார்கள். இது அதீத மருத்துவ குணம் வாய்ந்தது மட்டுமல்ல, குங்குமம் இட்டுள்ளவர்களை மிகவும் எளிமையாக்கி காட்டும். பார்ப்பவர்களையும் இந்த சிகப்பு வண்ணம் எளிமையாக்கிவிடும். இன்று காலப்போக்கில் வண்ணங்கள் எண்ணங்களுக்கு தகுந்தாற்போல் திரிந்துவிட்டது.

மஞ்சள் நிறத்திற்கு நோய் கிரிமிகளை எதிர்த்து அழிக்கும் தன்மை உண்டு. குணமும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டத. நவீன மருத்துவ வசதி இல்லாத காலங்களில் மஞ்சள் சஞ்சீவினியாகவே மக்களுக்கு பயன்பட்டிருக்கிறது என்றால் மிகையாகாது. பிளவை போன்ற நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பழங்கால மருத்துவர் பெரிதும் மஞ்சள் பெடியையே உபயோகத்து சிகிச்சை செய்துள்ளனர் குணமும் கண்டுள்ளனர். அதன் வாசத்திற்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மையுண்டு. பெண்மைக்கு மிகவும் புனிதத்துவத்தை சேர்ப்பது மஞ்சள், சருமத்தையும் மிருதுவாக பாதுகாக்கும் தன்மை கொண்டது. ஆண் தன்மையை காட்டும் ரோமங்களை நீக்கும் சக்தி கொண்டது. உணவில் கலந்துள்ள விஷத்தினை முறிக்கும், நல்ல மணத்தையும் அளிக்கும். குடற்புண்னை போக்கி துர்நாற்றத்தையும் போக்கும்.

பசுவின் கோமியம் போன்ற கிருமி நாசினி கிடைக்காத இடங்களில் மஞ்சள் நீரையே பயன்படுத்துவர். அதற்கு இணையான தன்மை கொண்டது. சிலர் நெற்றியில் நீரு போல் அணிவர். அது குணத்தை மேம்படுத்தும். பிறரை கவரும் தன்மையை கொடுக்கும். இப்படி பெரிதும் நம்முடன் நலன் கொண்ட மஞ்சள் கலாச்சாரத்தை பெரிதும் பேணி பாதுகாத்து பெருமை கொள்வோம்.

Share this Story:

Follow Webdunia tamil