எழுந்து வா எங்கள் தலைவா!

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (13:17 IST)
உன் மடி; உன் விழி ; 
உன்  தோள் ; உன் மொழி ; 
உன் நினைவு ; உன் சுவாசம் என
உன்  உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்கள்   
வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறார்கள்
எழுந்து வா எங்கள் தலைவா !
 
உன் விரலுக்கும், தமிழுக்கும் என்ன சண்டையா ? 
தாளா முடியாதத்  தவிப்பில் உன் செம்மொழி
எழுந்து வா எங்கள் தலைவா !
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு 
அந்த பாதையில் மரணம் இல்லை 
எழுந்து வா எங்கள் தலைவா !
 
நீ படிக்காதவன் தான் என் தகப்பன்னைப் போல ! 
என்னை படிக்க வைத்தவன் !
எனக்குப் பிறகு என் குடும்பம் மொத்தமும் பட்டதாரிகள் !
என் சகோதரிகளின் பெண் பிள்ளைகளை 
படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறாய் !
பட்டம் பெற அழைக்கிறோம் 
எழுந்து வா எங்கள் தலைவா !
 
நீ  தூசி அல்ல ! பறந்துப்   போவதற்கு
நீ  துகள் அல்ல ! துவண்டுப்   போவதற்கு
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் மறையாத 
எப்போதும் பிரகாசிக்கும் ஆதவன் நீ !
எழுந்து வா எங்கள் தலைவா !
 
சமூக நீதிக்கான உன் பாதையில் தான் 
எத்தனை கரு நாகங்கள் !   
பேய்களுடனும்  பிசாசுகளுடனும் நீ களம் ஆடிய  போர்களம் அது !
உன் சமத்துவபுரங்கள் அழைக்கிறது !
எழுந்து வா எங்கள் தலைவா !
 
தெள்ளுத்தமிழில் கவிப்பாட !
உன் துள்ளுத்தமிழ் உரை கேட்க !
உன்  தொல்காப்பியர் பூங்கா அழைக்கிறது !
எழுந்து வா எங்கள் தலைவா !
 
நீ நாத்திகன் தான் !
மண் சோறும் இல்லை 
பால் குடங்கள் இல்லை 
தீ சட்டிகள் இல்லை 
தீ மிதித்தல் இல்லை
திருவாரூர் தியாகராஜர் கோயில் பெரிய தேர் அழைக்கிறது !
எழுந்து வா எங்கள் தலைவா !
 
கடை மடைத் தொட்ட  காவேரியைக்  காண !
நீ பிறந்த மண் திருக்குவளைக் காண !
செந்தமிழே !
செம்மொழியே !  
சாயாத புகழே !
சிங்க குரலே !
அண்ணாவின் இதயமே ! 
திராவிட நூலகமே !
எழுந்து வா எங்கள் தலைவா !
 
 
 
இரா. காஜா பந்தா நவாஸ்
sumai244@gmail.com

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா?!. இதை ட்ரை பண்ணி பாருங்க!..

பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?!.. மிஸ் பண்ணாதீங்க..

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments