வேடனுக்கு நம்பிக்கை முறிக்க தெரியவில்லை.....

லெனின் அகத்தியநாடன்
செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (15:19 IST)
வேடனுக்கு நம்பிக்கை முறிக்க தெரியவில்லை.....
 
சிறகிழந்து வீழ்ந்து கிடக்கிறது
ஒரு சின்னஞ்சிறிய பறவை
அது எழுவதும் வீழ்வதுமாக துடிதுடிக்கிறது...
 
மீண்டும் மீண்டும் அவ்வாறே.
அது பறந்துசெல்ல துடிக்கிறது..
 

 
அதன் ஒரே நம்பிக்கை
இப்போது அதற்கு
சிறகு முளைத்துவிடும் என்பதல்ல
உயரே விரிந்த வானம்
ஒன்று இருக்கிறது என்பது மட்டுமே...
 
வேடனுக்கு அதன்
சிறகை முறிக்கத் தெரிந்திருக்கிறது.
ஆனால் அதன் நம்பிக்கையை?..


- லெனின் அகத்தியநாடன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் வரும் ஆபத்து!..

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?.. வாங்க பார்ப்போம்!..

முடி கொட்டாமால் இருக்க என்ன செய்யவேண்டும்?.. வாங்க பார்ப்போம்!...

மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

Show comments