உதிரும் சிறகுகள்

Webdunia
சனி, 14 நவம்பர் 2015 (21:23 IST)
உதிரும் சிறகுகள்

மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்

காலையில்
 
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து -
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளரம் வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.
 
- கவிக்கோ அப்துல் ரகுமான்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

Show comments