Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செடியின் துயரம்

Webdunia
பலநூறு மொக்குகள் மல ர
புன்னகையுடன் பேசத் தொடங்கியது செட ி
முந்திக் கொண்ட ஒவ்வொரு மலரும ்
முணுமுணுத்தது தனித்தனி மொழியில ்
தானாகக் கண்டறிந்து சே ர
வழிகேட்டத ு
கூந்தலுக்கும் கோயிலுக்கும ்
தோட்டத்தைச் சுற்ற ி
இலைகளாய்ச் சிதறி ன
சொல்சொல் எ ன
அவை முன்வைத்த வேண்டுகோள்கள ்
ஆளற்ற வெளியில் பரிதவிக்கும ்
பார்வையற்றவர்களெ ன
காற்றின் திசைகளில் விடைவேண்ட ி
கைதுழாவி நடுங்கிக் களைத்தத ு
காலம் சற்றே கடந்தாலும ்
ஒப்பந்தப்படியும ்
உரிமைப்படியும ்
பறித்தெடுத்தன பூக்காரனின் விரல்கள ்
போகுமிடம் தெரியா த
இழப்பின் வலியில ்
கிளைகழற்றிக் குமுறியது செட ி

நாலுவேலி நிலம ்

இன்றைய புறநகர ்
அன்றைய வயல்வெளியாய ்
விரிந்து கிடந்த நாட்களில ்
விளையாடிக் களித்தவன் நான ்
ஏரிப் பாசனத்து நீர ை
இரவு முழுக்கக் காவல்காத்த ு
மடைமாற்றிப் பயிர் வளர்த்தவன் நான ்
தவளைச் சத்தத்திலும ்
நிலாசொன்ன கதைகள ை
நின்று கேட்டவன ்
கதிர்முற்றிக் கனிந்த காலத்தில ்
பனிக்குச் சாக்குப்பை போர்த்த ி
காவல் காத்ததும் நான ே
உழைக்கும் மிஞ்சாத கணக்கில ்
முதுகில் கவிந்த சுமை தாளாத ு
மனம் வெதும்பிப் போனேன ்
அவரசரதுக்கும் அவசியத்துக்கும ்
துண்டுதுண்டாக விற்றுத் தின்றதில ்
பாதியை இழந்தேன ்
மீதியைத் தொலைத்த ு
அதிர்ஷ்டமானைத் துரத்தியதும ்
நகர்வனத்தில் சிறைப்பட்டதும ்
எல்லாருக்கும் தெரிந்த கத ை
இறந்த காலத்தில ்
இழந்த செல்வத்தின ்
நினைவுகளை அசைபோட்டபடியும ்
நமக்கும் இருந்ததப்ப ா
நாலுவேலி நிலம் என்ற ு
பேரப்பிள்ளைகளிடம் விவரித்தபடியும ்
வீட்டுத் தொலைக்காட்சியில ்
வயலும் வாழ்வும் பார்த்துக் கொண்டிருக்கிறேன ்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments