Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிதைகள் : ஹம்சத்வனி

Webdunia
26.3.1960 - ல் செட்டிகுளத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் தமிழ்செல்வன் இலங்கையின் வசித்து வந்த இவர் குடும்ப மற்றும் அரசியல் பின்புலங்களால் மனம் கசந்து 1983 ல் நாட்டை விட்டு வெளியேறியவர். தற்போது கனடாவில் வசிக்கிறார்.

` முடிவிலும் அழியாதத ு' என்ற கவிதைத்தொகுப்பு இவரது மூன்றாவது தொகுப்பாகும்.

நன்றி : முடிவிலும் அழியாதத ு

கவிதைத் தொகுப்ப ு

வெளியீடு : `நீலமலர ்' (1988)

மோதல ்

இருள் நிலங்களினூட ே
பயணம ்
கிளைகளின் இருப்பை உணர்த்த ி
ஓடும் அடிமரங்கள ்
துருவிச் சலித்தன கண்கள்.

ஸ்நேகமாய்க் குளிர்ந்தத ு
மலையும் அருவிக் குளிப்பும்.

காலடிக்கு இறங்கி வந்த முகில்களுடன ்
பேசிக்கொள்ள ஏது பொழுத ு?
` வாழ்க்கையைப் பிரிந்தோம ்'
எனும் சோகம ்
வந்து மோதிற்று நெஞ்சில்.

மோதிப் பிரிந்த அலைகளுடன ்
அந்த இரவில் மட்டும ்
போயிற்று கவலைகள்.

நிலாவைப் பார்த்தபட ி
பாறை மீதிருக்க ஏது பொழுத ு?
` வாழ்க்கையைப் பிரிந்தோம ்'
எனும் சோகம ்
வந்து மோதிற்று பின்னர்.


தசை
உன்னில் இருந்த ு
என் தசை பிரிந்ததும ்
இரத்தம் கசிந்தது என்னுள்.

நினைவுகளை நசுக்கிவி ட
நாட்களாலும் முடியவில்ல ை
பிரிவில் துலங்கியத ு
பரஸ்பர அன்பு.

எனினும ்
கோபங்களில் அத ு
எங்கோ பதுங்கிக் கொண்டதும ்
உண்மை தானே.

வார்த்தை நகங்களால ்
கீறிக் கொண்ட இதயங்களுக்க ு
எத்தனை முற ை
ஒத்தடம் கொடுப்பது சொல்.

ஆனாலும ்
பிரிக்கப்பட்ட தசைகளில் இருந்தும ்
இரத்தமாய் கசிகிறது அன்பு.

கவிதைகள் : ஹம்சத்வனி
நட்ப ு

உலர்ந்த பாறைகளின ்
இடுக்குகளெல்லாம ்
வாழ்க்கை துளிர்த்திருந்தது.

ஒவ்வொரு தளிரும ்
உயிர்த்திருக் க
மனமெல்லாம ்
ஒளி வெள்ளம்.

அழிவில் இருந்தும ்
துளிர்ப்பதற்கான முனைவ ு
மொட்டு விட்டது என்னுள்.

பரந்தது போலும் கடல ்
பாடுவன போலும் நத ி
வானும் நீள நீ ள
நட்சத்திரங்கள் துலங்கி ய
இரவில் நில ா
என் கைகளில்.


இலகுவாதல்
என் நாளங்களுள் புகுந்த ு
அணுக்களில் சில்லிட்டத ு
புல்லாங்குழல்.

ஆத்ம ஒலி ஆர்த்தெழுந்த ு
ஆரத் தழுவிற்ற ு
உள்ளும் புறமும்.

காலத்தில் கரைகின் ற
வாழ்வைப் போ ல
காற்றில் கரைந்தது.

குடிபெயர்ந்து நிலமும் பெயர்ந்த ு
வெளி என்றாகிய பின ்
விதிகள் தொலைந்தன.

பாறாங் கல்லெ ன
உயிர்த்துக் கிடக்கும் நினைவுகள ை
நெம்பித் தள்ளுவதையும ்
அகத்தின் சிடுக்குகளை அவிழ்ப்பதையும் தவி ர
புறத்தின் உறவுகள் எல்லாம் எளிதாயிற்று.

எவ்வாறாயினும ்
ஒவ்வொரு முற ை
பிரசாத்தின் புல்லாங்குழல ்
என் நாளங்களினுள ்
புகும் போதெல்லாம ்
நான் என்பது அழிந்தழிந்த ு
புனிதமாகிறது.

கவிதைகள் : ஹம்சத்வன ி



தொலைத்தல ்

எல்லா நம்பிக்கைகளும ்
தொலைந்து விடுமோ என்ற பயம ்
நெருங்கி வரலாயிற்று.
மேலும் மேலும ்
குரூரமாய் மாறுகின்ற சூழல ை
இந்த சூரியன ்
எப்படித்தான் அழகாக்குகிறான ்
என்பது மட்டும ்
புரியவே இல்லை.
வெண்பனிப் புகாரின ்
குளிர்ச்ச ி
காதை விறைப்படையச் செய்கிறது.
வெண்பனியிலும ்
நிரவிப் பரவும் கருமையிலும ்
அந்த மல ை
மறைந்து போயிற்று.
தனிமையில் ஆழ்கையில ்
அர்த்தங்கள் வெளிச்சமாயின.
நான ், அவள ், அவளுக்குண்டா ன
வேறு வேறு முகங்கள ்
நகங்கள் முளைத்த வார்த்தைகள ்
அவற்றுள் சில.
அழுவதற்கும் திராணியற்ற ு
விக்கித்து நிற்கும் மக்களுடை ய
கனவுகளைப் போ ல
என்னுள்ளும் குதறப்பட்டன நம்பிக்கைள்.
அந்த இரவில ்
அறைக்குத் திரும்புகையில ்
பார்த்தேன ்
எனக்கும் மூன்று நிழல்கள்.

காற்ற ு

விரகதாபமிக்க காற்ற ு
என் மீது மோதுகையில ்
நீ பிரசன்னமாகிறாய்.
சின்ன ஜன்னல்களுள் ள
எங்களின் அறைகள ்
தகர்ந்து போய்விட்டத ை
நீ அறிவாய்.
அந்த ஆலமர நிழலும ்
வயல் வெளியும ்
உவப்புடையதாய் இல்லை.
குறிகளை இழந்த ு
முண்டங்களாய் அலைகின்றனர் மாந்தர ்
மண்டையோடுகளுக்குள ்
நாறுகிறத ு
மனிதத்துவம்.
உன் கருவறையில ்
உயிர்கொள் ள
எந்த ஆண்மகனின் விந்தணுக்கள ்
வந்து சேரப் போகின்றன.
முண்டங்களாய் அலைபவர் போ க
எஞ்சியோர் அலிகளாயினர்.
ஆகையினால் ந ீ
காற்றைப் புணர்ந்த ு
கருத்தரி.
இருப்பின் சுதந்திரமும ்
ஆண்மையும் கொண்டத ு
காற்று.


அழும் குரல்
காற்றில் சிணுங்கும் இலைகள ்
கனவுகளைத் துயிலெழுப்பும்.
மழை ஓய்ந்த ஈரத்தில ்
அந்தக் குழந்தையின் அழுகுரல ்
தவழ்ந்து வரும்.
கண்ணாடியில் தங்கிய நீர்த்துள ி
வைரமாய் ஜொலிக்கும ்
என் இளைய நாட்களைப் போல.
கரை கடக்க முற்படும்போதெல்லாம ்
புயலில் சிக்க வைத்த ு
திரும்பவும் தீவுகளில ்
தள்ளி விடுகிறது - வாழ்க்கை.
என் சொந்தங்களையெல்லாம ்
சிதற அடித்துவிட்டத ு
இரக்கமில்லாக் காலம்.

உள்ளும் வெளியும ்

காற்று போன்றது வாழ்க்க ை
புதிதாய் எதனையும் சொல்லத் தவறி ய
புத்தகம் போல் பொழுதுகள்.
அறைச்சிறையில் நான்.
அவள் விரல்களின ்
ஸ்பரிச ஆவிகள் வளைய வ ர
மனதைப் பிளந்திறங்கின வேதனைகள்.
வெளியில் -
பகலில் தெரியும் பாதி நிலவ ு
வெய்யிலோடு மழ ை
கருமுகில் விலக ஒளிர்ந்தும ்
மறைக்க மறைந்தும ்
இருப்பை உணர்த்தும ்
சூரியன்.
தொலை தூரத்திலிருக்கும ்
தங்கையின் குரல ்
தொலைபேசியில் என்னை அழைக்கும்.
உள்ளிருந்து தினமும்தான ்
வெளி வருகிறேன். ஆனாலும ்
வாழ்க்கைதான் காற்று போல...

சுவாசம ்

அறுந்து துடித்து இறந்தாலும ்
பல்லி வாலாய ்
மீண்டும் வளரும் நம்பிக்கைகள்.
தேடு என்று குரல் கொடுத்தாலும ்
முகம் காட்டாது ஒளிந்து கொள்ளும் வெளி.
ஆவல் பொங்கியெழ அழைத்தாலும ்
கரையில் நெம்பித் தள்ளும் கடல்.
எதிர்பார்ப்புகளும் வாழ்வும ்
முரண்டிக் கொண்டாலும ்
கற்றுத் தரும் வாழ்வின்முன ்
மண்டியிட்டுக் காத்திருப்பேன்.
மரணத்தை சுவாசிக்கும் வரையிலும ்
காற்றின் தோழமையில் மகிழ்ந்திருப்பேன்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments