நூற்பா யாப்பில் நுண்பகுப்பு விமர்சனம்நோயல் ஜோசப் இருதயராஜ்
[பெண் கவிஞர்களில் இன்று சிறு பத்திரிக்கை தளத்தில் உரத்த குரலில் பெண்களின் உடல் மொழியை எழுவதற்கான தேவையை வலியுறுத்தி வருபவர் குட்டி ரேவதி, அவரது சமீபத்திய கவிதைத் தொகுதிகளில் இந்தக் குரல் உரத்து ஒலித்து வருகிறது. மண்டைக்குள்ளே பற்றிய அந்தப் பொறியை பரபரவென்று எரித்துப்பரப்புவோம் என்று ஒரு வரியை இவர் எழுதப்போக, நோயல் இருதயராஜ் தனது தகர்ப்பு விமர்சன தேவதையை இந்த வரிகளின் பக்கம் திருப்பி, அகழ்ந்தாய்ந்து சென்று தீ பற்றிய தத்துவ, விஞ்ஞான, இலக்கிய, மரபு உட்பொருள்களை தனது சொற்றொடரியல், பொருளியல் கூறுகளுடன் உட்கலந்து நுண் தகர்ப்பு செய்து எள்ளுகிறார், கூடவே சுய எள்ளலும் நட்புடன் தொடர்கிறது. லிரிக் வடிவத்தில், மரபையும் விட்டுவிடாமல் அதற்காக மரபுவழியில் மட்டுமே பண்டிதத்தனமாக ஒழுகாமல் மரபை அனுசரித்தும், எதிர்த்தும், எள்ளியும் ஒரு புதுவகை விமர்சனக் கவிதை மாதிரியை நமக்கு அளித்துள்ளார் நோயல்.]
I
"
மண்டைக்குள்ளே பற்றிய பொறியைப்பரபர வென்று எரித்துப் பரப்புவோம்"கேளீர்! கேளீர்! வீரவசனங்கள்!வாரீர்!வாரீர்! வடவையை எழுப்புவீர்!உலகம் எங்கிலும் உள்ள பெண்களே!(
பதினாறு எட்டும் மதாங்கினியர் தொட்டுஅறுபது தாண்டிய மந்தாகினியர் உட்படநுண்மான் நுழை'புழை சமத்துவம் உண்டு)ஒன்று சேருங்கள் புணர்ச்சிப் புரட்சிக்கு!'
புலிங்கம்' எனப்படும் தீப்பொறி மூட்டி'
உற்கம் எனப்படும் தீத்திரள் தூண்டிக்கொழுந்து விட்டெரியும் சுவாலைக்ள் செறித்துச்சிகாவர்க்கங்கள் ஆக்கி எழுநா உயர்த்தித்தீவகை எல்லாம் ஏகமாய்த் திரட்டிஊர், நகர், நாடு, தேசம், கண்டம்அர்த்த கோள எல்லைகள் கடந்துஉலகையே அழிக்க ஊழியின் முடிவில்பெண்பரி வடிவில் பெருங்கடலினின்றும்எழும்பும் வடவையாய் எழும்ப வாரீர்!ஒடுக்கப்பட்ட உடலின் விடுதலைபடுக்கை அறையில்தான் பலிக்கும் என்றுகூவி அழைக்கிறார் குட்டி ரேவதி!தீமிக்க தீயோர் தேவியைச் சேருவீர்!தாய்க்குலம் இனிமேல் தீக்குலம் ஆகட்டும்!அரிவையும் தெரிவையும் எரிவை ஆகட்டும்!
II
முலைகள், யோனி, புலன் உணர் பொறிகளேபடைத்த மதன் முன் தானைத் தலைவியே!மண்டை என்ற பகுதியும் உமக்கோ?(
இடை நிலை, விகுதியின் விசேடங்கள் அறிவேன்)மண்டையோ மண்டை உள்ளீடோ அற்றது முண்டம், கவந்தம், மட்டை, யூபம்,செக்கு, புனல், ஊன் தடி, உடல் குறை எனப்பிங்கல திவாகர, சூடாமணி நிகண்டுகள்சங்கை இன்றிச் சாற்றி உள்ளன!எண்சாண் உடம்புடை மனிதர்க்கே அன்றிநுண்ணுயிர் எதற்கும் இன்றியமையாததுசிரசே என்பதும் ஜீவராசிகளிலே'
சிரமிலி' யாவது நண்டே என்பதும்"
திறவோர் காட்சியில் தெளிந்தனம்" ஆகவேநண்டைத் தவிர பெண்டகை உமக்கும்சிரம் துணியுண்டதாய்த் துணிபு கொள்கிறேன்.
III
பின் நவீனத்துவ சம்சய வாதத்தின்சிகரமாகிய சுய ஐயுறவில் இன்னும் எனக்கு நம்பிக்கை இருப்பதால்தலைக்குறை தங்களுக் கென்னும் என் துணிபைத்தலைகீழாக்கி தமியெனுக்கேதலைக்குறை உளதெனத் தர்க்கத் திற்காகஒத்துக் கொள்கிறேன், ஒரு கால் உமக்கும்மண்டை இருக்கலாம், ஆனால் அதனுள்மண்டுவதென்ன? விசால மனத்துடன்எத்துணை விட்டுக் கொடுத்து நான் எண்ணினும்கடபுட சடமே பதம் சிதம் சதமெனமயங்கும் உமக்கு மண்டையி நுள்ளேபொறி பறந்திடுதல் அரிதினும் அரிதே!
IV
அப்பாவி மானிடர் அறுதிப் பெரும்பான்மைக்குதப்பாது இயற்கை தரும் அருங் கொடையேபெரு, சிறு மூளைகள், முகுளம் தண்டெனவகைவகை, அமை வெளிர்சாம்பல் கூழ்மம்!இயற்கை கொடுப்பினை ஏற்றிட இயலாஉமது மண்டை உயர்வகை ஒன்றிலேதூய ஒருதனி சுரோணீதப் பெருக்கும்சுக்கிலம், சுரோணீதம் கலந்த கலிலமும்கலிங்கக் கூளிகள் காய்ச்சிய கூழ்போல்பொங்கி வழிகின்றன மூளைக்குப் பதிலாய்!முடிமுதல் அடிவரை முழு உடல் எங்கணும்கடிதடம் வெடிக்க அம்மைப் புண்களாய்ச்சபித்தவனிடத்தே சலுகை கோரிஅவலட்சணத்தை ஆயிரம் கண்களாய்மறைத்துத் தோற்றிய மழுங்கல் இந்திரன்போல்சுரோணிதம், கலிலம் குழம்பிய கூழ்மமேயோகம் ஆற்றும் கலைஞனின் நெஞ்சிலும்தியாகம் பிரியும் காதலன் நெஞ்சிலும்முன் நிகழ்வு வின்றியும் மூளும் படைப்பியல்பொறி என மாயப் புரட்டு முயல்கிறீர்!சரி!சரி! சமுசய வாதத்தை இன்னும்ஒருமுறை உமக்கே அனுகுலமாக்குவேன்.மற்றெல் லோரையும் போலவே மண்டையில்பெற்றீர் மூளை என்பேன் பேச்சுக்கு!ஆயினும் ஒரு வினா: மண்டையுள் மட்ட்மேதீயெழல் எப்படி? தேகம் முழுவதும்பாதாதி கேசமாய்க் கேசாதி பாதமாய்வேதி, மின், வெப்ப, எந்திரச் சக்திகள்வட்டமாய், கிடையாய் வலமிடம் இடவலம்கணத்தில் பாய்கையில் கபோலம் மட்டுமேபொறியின் தொடக்கமும் தோற்றமும் ஆகுமோ?மூளை மின் இயக்கம் அளவீடு செய்வதுஎலக்ட்ரோ என்ஸெபாலோகிராம் எனக் கூறுவர்,இதய மின் இயக்கம் அளவீடு செய்வதுஎலக்ட்ரோ கார்டியோகிராம் என்று கூறுவர்;தசை மின் இயக்கம் அளவீடு செய்வதுஎலக்ட்ரோ மையோகிராம் எனக்கூறுவர்;பார்வை மின் இயக்கம் அளவீடு செய்வதுஎலக்ட்ரோ ஆக்யூலோகிராம் எனக்கூறுவர்;முகர்வு மின் இயக்கம் அளவீடு செய்வதுஎலக்ட்ரோ ஆல்பக்ட்டோகிராம் எனக்கூறுவர்.உயிர்த்துடிப்படங்கா எந்தவோர் உடலிலும்குருதி, நிணம், தசை, நரம்பென்னும்மண்டலங்களிலோ மற்றும் உறுப்புகளிலோஅணு ஒவ்வொன்றிலும் அயான் முதல் வகைவகைசக்தி அலகுகள் சஞ்சரிக்கின்றன.பருவம், உள நிலை, சூழல், வாழ்முறைதற்செயல் எனக் காரணங்களைப் பொறுத்துஆங்காங் குடலில் சக்தியின் அளவுஓங்கும் ஒடுங்கும். ஆக உம் பொறியின்தோற்றுவாய் ஒருமை வாதம் தோற்றது.
V
இதுவும் கிடக்கட்டும்! இன்னுமோர் முறையும்உதவுவேன் உமக்கு, என்னை ஐயுற்றே!பொறியின் தோற்றுவாய் பன்மையை ஏற்கிறேன்பொறியின் தோற்றுவாய் ஒருமையை ஏற்கிறேன்மண்டலம் இட்ட நாகத்தைப் போன்றேகுண்டலி சக்தி குதம் களனாகியமூலாதாரத்தில் மூண்டு கிடப்பதாய்க்காலங் காலமாய்க் கழறினார் சித்தர்!மூலக் கனலை யோக முறைகளால்குய்யம் மேவிய சுவாதிட்டானத்தும்,னாபியைச் சுற்றிய மணிப்பூரகத்தும்இதயம் ஆர்ந்த அனாகத்திற்கும்குரல்வளை சேர்ந்த விசுத்தி தன்னிலும்படிப்படி உயர்த்திப் பக்குவப் படுத்திமுடிவில் சகத்திர ஆரம் எனப்படும்ஆயிரம் இதழுடை அற்புதத் தாமரைத்தூயொளி யாக்கவும் சொன்னர் சித்தர்!குண்டியில் குடிகொள்ளும் குண்டலிசக்தியைமண்டைக்குச் செலுத்தும் மார்க்கத்தை மாற்றிமண்டையில் தொடங்கிக் குண்டிக்குச் செல்லும்குண்டக்க மண்டக்க குணவதி நீயோ?மேல் நோக்கிய பயணத் திட்டம் தீட்டியபிரமிளின் மனச புத்திரி? அன்னார்வரைவுகள் உன் நூல் அட்டையில் வார்த்துகாட்டுகின்றாய் படம்! கண்கட்டு வித்தையா?கழித்தல் உறுப்பில் பொறிகாண் சித்தரும்பெருக்கல் உறுப்பில் பொறிகாண் ப்ராய்டரும்பொறியின் தோற்றுவாய் ஒருமை பேசினார்,இருதிறம் ஆகுவர் இருமை எதிர்வில்முன்னவர் சுட்டிய பின்புறக் கொள்கையோபின்னவர் சுட்டிய முன்புறக் கொள்கையோபொருந்தா வகையில் தம் தலைக் கொள்ளியால்சொறிந்து கொண்ட அரியினம் போலபொறுத்திக் கொள்கிறீர் பொறியை மண்டையில்!பொறியின் பின்கீழ் தோற்றுவாய்க் கொள்கையும்பொறியின் முன்கீழ் தோற்றுவாய்க் கொள்கையும்தெளிந்தோ மருண்டோ திரிக்கும் போதிலும்தென்னாடுடைய சிவன் நினைத்திருப்பிரேல்நெற்றியில் பொறியின் நிலக்ண் டிருப்பீர்!சித்தருக்கெதிராய் பொறி பிலம்பெயர்ந்தீர்!சைவருக்கெதிராய் நுதல் தலை ஆக்கினீர்!சித்தரின் போக்கு நந்தமிழ்த் தத்துவம்,சிவனின் போக்கு நந்தமிழ்ச் சமயம்நமது மண்ணின் மரபிவை, இல்லை ஏன் உமது மண்டையில் உள்ள மண்ணோடு?பெரும்பான்மையான பேய் பிசாசங்களைக்கொள்ளிக்கண், கொள்ளிவாய்,கொடும்பல் சகிதமாய்கொழுந்து விட்டெரியும் கோர வடிவுடன்விரித்த மரபிற்கு விலக்காய் விந்தை உம்சிரத்தையே மாற்றினீர் தீச்செட்டியாகபாலை பாடிய பெருங் கடுங்கோ பாடியபேய்மகள் இள எயினியின் உடன் பிறப்பே வாழி!VIவரலாறு நெடுகிலும் வளர்தீ வர்க்கங்கள்,வரலாறு நெடுகிலும் தீவளர் வர்க்கங்கள்எத்தனை!எத்தனை! எண்ணி மாளாது;எண்ணி மாளாது இறந்தோர் திரள்களும்!அழிவே போர்த்தீ ஆகவனீயமும்சுய நல மனத்தீ காருக பத்தியமும்உயிர், பொருள் விரயம் செய் வேதாக்கினியும்ஆவி சுகம் தரும் விவிலியத்தீயும்ஒடுக்கல் ஆட்சியே கொணர் புரட்சித்தீயும்தனி நபர் சிலை நடும் பகுத்தறிவுத் தீயும்சாதி, மதம், இனம், கருத்துரு தீயும்,எத்தனை! எத்தனை! எல்லா தீயுமேசுட்டெரிந்திட்டதும், சூடு போட்டதும்மண்டையில் இம்மியும் உறைக்கவே இல்லையோ?சூடறியாதோ சுற்றும் உன் பூ... னை?புதுமைத் தீ என வேடம் பூணும் உன்காமமும் தற்கணம் விசிறுதொல் காங்கையே...வாம சாரமும் வாத்சாயனமும்பர்த்ரூ ஹரியின் கொக்கு சாத்திரமும்சொல்லா எதனைச் சொல்ல வந்தாயோ?சொலி முடித்ததும் சூத்தை யானதே!மண்டைக்குள்ளே பற்றிய பொறியைப்பரபரவென்று 'எரித்தல்' எங்ஙணம்?பொறியே எரியும், பொறியே எரிக்கும்,பொறியில் எரிபொருள் இட்டும் எரிக்கலாம்,பொறியை எரியாய் வளர்க்கலாம் என்பதை,எரிவித்தல் எனச் சொல்வதே அன்றி'
பொறியை எரிப்பது' பொருந்தாத் தொடர், செயல்பொறியும் ஒரு பொருள் குறிப்பதல்லவே,புள்ளி, இலக்குமி, எந்திரம்,உறுப்பெனப்பல்பொருள் சுட்டித் தேவைப்பட்டாதஇருண்மை கொண்டதால் இடர் விளைக்கின்றது.தலைப்பொறிக் கொள்கையின் தத்துவ மலைவும்பொறியை எரித்தலாம் செந்தமிழ் மலைவும்கலிங்கத்துப் பரணியும் நள்வெண்பாவும்பாலியல் உறவைப் போராய்ப் புனைந்தஉருவகம் கொச்சைப்படுத்திய ஒச்சமும்வீறுரை உன்னதை, வீண் உரை ஆக்கின.பதம், சீர், நடை, மதி கேடுகள் பரப்பும்கவியிலா உன்கவி எடுத்துக்காட்டாய்னுண்பகுப்பற்றி நூற்பா யாப்பில்ஆசை பற்றியே அறைய லுற்றனென்.ஏசினேன் என்று எரிந்தெரிந்து விழாதே!