உள்ளுறை இரண்டாம் இதழில் வெளியான கு.ப. ராஜகோபாலன் அவர்கள் எழுதிய கவிதை உங்களுக்காக
காலென்றால் கேலி செய்கிறாயே - எதற்காக?
கவிதையைக் கள்ளச் சொல் என்கிறாயே -
வேண்டுமென்றுதானே?
நான் துதிக்கிறேன் என்றுதானே?
இருக்கட்டும் -
நமது இன்பத்து ஏகாந்த இரவின் இறுதியில்,
பிறைவெளுத்த பின்மாலையில்,
இருள் வெள்ளம் வடிந்த வைகறையில்,
ஓவிய மூட்டும் உன் ஒளிக்கரங்களைவிட்டு
நான் பிரிவினை கொள்ளும் போர் வேளையில்,
உன் கண்களைக் கலக்குவதென்ன - காதலல்லாமல்?
அந்தக் கனவழியும் பொழுதில்,
உன் வாயின் வார்த்தை வனப்புத்தானென்ன -
கவிதையல்லாமல்?
நன்றி உள்ளுறை
இதழ் - 2
செப்-அக் 2009