உள்ளுறை இதழில் வெளியான ஃபாசில்கள் என்ற கவிதை.
மிருதங்கத்தின் தாளம்
எத்துணை ஓங்கி ஒலித்தாலும்
மெளனமே பிரகாசப்படும்.
உனக்கும் எனக்கும்
இடையிலுள்ள தூரம்
நம் உறவுக் கயிற்றின் திண்மை
(உயிரும் காதலும் தியானமும்
பிணைத்துப் பின்னப்பட்ட முப்புரி நூர் அது)
பிரித்து வைக்கும்
காலத்தின் தொகை
நம் எண்ண விரிவின் எல்லை.
காலமும் இடமும் வெற்றுச் சொற்கள்
நம்மைப் பொறுத்தவரை.
கண்ணும் கையும்
பாரிணாமத்தின் தோற்றுப் போன ·பாசில்கள்
நன்றி உள்ளுறை
இதழ் - 2
செப்-அக் 2009