2011 சட்டசபைத் தேர்தல் : ஒரு பார்வை

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (12:32 IST)
தமிழக 14 வது சட்டமன்றத் தேர்தல் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 234 தொகுதிகளைக் கொண்ட இந்த சட்டசபைத் தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி 146 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
 
இந்த தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக எதிர்க் கட்சி என்ற தகுதியைக்கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மொத்தம்  160  தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 146 தொகுதிகளில் வென்றது. திமுக 119  தொகுதிகளில் போட்டியிட்டு 23 ,தொகுதிகளில் மட்டுமே வென்றது.
 
அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற வியகாந்த் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு29  தொகுதிகளில் வென்றது
சிபிஐ 10 தொகுதிகளில் போட்டியிட்டு 10 தொகுதிகளில் வென்றது சிபிஎம் 12  தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வென்றது
மனித நேய மக்கள் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டு 2  தொகுதிகளில் வென்றது சமத்துவ மக்கள் கட்சி( சரத்குமார்) 2  தொகுதிகளில் போட்டியிட்டு  2 தொகுதிகளில் வென்றது அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் 234 தொகுதிகளில் போட்டியிட்டு 203 தொகுதிகளில் வென்றது.
 
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மொத்தம் 234  தொகுதிகளில் போட்டியிட்டு 31 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்தன. பாஜக 204 தொகுதிகளில் போட்டியிட்டு  1 தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை.
 
ஜெயலலிதா தலைமையிலான அதிமுவுடன் கூட்டணி அமைத்த விஜயகாந்த்தின் தேமுதிக முக்கிய எதிர்க்கட்சியாக தகுதி பெற்றது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக்கிய அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. பதவி இழப்பாரா?

தமிழ்நாட்டில் மட்டும் 1 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கமா? சென்னையில் மட்டும் 40 லட்சமா?

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்.. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!

ஈரோடு மாநாட்டுக்கு பக்கா ஏற்பாடு.. விஜய்க்கு நல்ல பெயர் வாங்கி தருவாரா செங்கோட்டையன்?

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments