Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8, 17, 26

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2007 (15:53 IST)
8, 17, 26 - ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் காரியத்தடைகள் விலகும். தெளிவான சிந்தனைகள் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். கணவன்-மனைவிக்குள் உண்மையான அன்பை செலுத்துவீர்கள்.

பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அவர்களின் உடல் நலம் சீராக இருக்கும். முன்கோபம், பிடிவாதக்குணம் நீங்கும். சகோதரவகையில் நன்மை பிறக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுகும். நண்பர்களின் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வீண் அலைச்சல் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்புகூடும்.

கன்னிபெண்கள் சிந்தித்து செயல்படுவார்கள். கல்யாணப்பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். கனவுத்தொலை, கண் எரிச்சல் விலகும். பிரபலங்களின் சந்திப்பால் நன்மை பிறக்கும். அரசுக் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். ஆடை, ஆபரணம் வந்து சேரும்.

வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வாகன வசதி உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெறுகும். மாணவர்களின் நினைவுத்திறன் அதிகரிக்கும். வேற்று மதத்தினரால் நன்மை பிறக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.

வியாபாரத்தில் உங்களின் பங்களிப்பு அதிகரிக்கும். புதிய வேலையாட்கள் வந்து சேருவார்கள். உணவு, இரும்பு வகைகளால் ஆதாயம் பெறுகும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கூட்டுத்தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.

உத்யோகத்தில் மகிழ்ச்சி தங்கும். மேலதிகாரியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். நல்லது நடக்கும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்-5, 6, 14, 15, 23, 24

அதிஷ்ட எண்கள் -5, 6

அதிஷ்ட நிறங்கள்- மயில் நீலம், சிவப்ப ு

அதிஷ்ட கிழமைகள்- வியாழன், வெள்ள ி
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரீ காளத்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா: குவிந்த பக்தர்கள்..!

இந்த ஆண்டின் முதல் நாள் எப்படி இருக்கும்? – இன்றைய ராசி பலன்கள்(01.01.2025)!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பகல்பத்து உற்சவம்.. இன்று கோலாகல தொடக்கம்

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கும்பம்! | January 2025 Monthly Horoscope Kumbam

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மகரம்! | January 2025 Monthly Horoscope Magaram

Show comments